பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் ஈகையும் இலங்கைக்குப் போகவேண்டுமென்ற கருத்தினால், 'நீ வழி காட்டுவாய்' என்று ராமபிரான் வருணனிடம் கேட்டுக் கொண்டார். பணம் கேட்கவில்லை, காசு கேட்கவில்லை. வழி தெரியாமல் சுற்றி அலைந்து தளர்ந்திருக்கிற ஒருவனுக்கு, 'மயிலாப்பூர் போக வழி என்ன?" என்று கேட்டால், 'இதுதான் வழி" என்று சொல்லக் கூடாதா? அதுபோல், "இலங்கைக்குப் போக ஒரு வழி காட்டு' என்று ராமபிரான் கேட்டார். எப்படிப் போகவேண்டுமென்று சொல்ல வருணனுக்குத் தெரியும். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல், தளர்ந்து வந்து யாசித்த பெருமானுக்கு வழி இதுதான் என்று காட்டாமல், அவன் கரந்திருந்தான். அதன் பலன் என்ன? கடல் தீப்பற்றிக் கொள்ள வெற்றிச் சிலை வளைத்து அம்பைப் பொழிந்தார் ராமர். "அத்தயை பெருமானுடைய மருகன் நீ. இரப்பவர்க்கு ஒன்று ஈயவில்லையானால் தண்டனை கிடைக்கும் என்பதை உன்னு டைய மாமா தம் வாழ்வில் காட்டியிருக்கிறார். அதனை நான் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஈய வேண்டுமென்ற ஆசை இருந்தும் அது நிறைவேறுவதற்குரிய வழியில் என்னை நீ விதிக்கவில்லையே! செத்துப்போவதற்கும் பிறப்பதற்குமாகப் படைத்திருக்கிறாயேயன்றி, தளர்ந்தவர்க்கு ஒன்று ஈய நீ என்னை விதிக்கவில்லையே!' என்று அருணகிரியார் இந்தப் பாடலில் குறையிரந்து வேண்டிக் கொள்கிறார். நமக்காக அருணகிரியார் பிறருக்கு ஈயாமல் வாழ்ந்தவரா? இப்படி அவர் சொல்கிறாரே. - அவர் சோறு போட்டிருந்தால் ஒரு வேளையோடு போயிருக்கும். உடை வாங்கிக் கொடுத்திருந்தால் சில மாதங்களுக்குள் கிழிந்து போயிருக்கும். தம் வாழ்க்கைக் காலத்தில் நேருக்கு நேராக உபதேசம் செய்திருந்தாலும் தமக்குப் பின்னால் வருகிற மனித சமுதாயம் அந்த உபதேசத்தால் பயன்பெற முடியாது. தளர்ந்தவர்களுக்குப் பிறவித் துன்பத்தைப் போக்கிப் பிறப்பில்லா இன்ப நிலையை அடைவதற்குரிய வழியைக் காட்டவேண்டுமென்ற பரம கருணையினால் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலான நூல்களை வழங்கி விட்டுப் போயிருக்கிறார். நம்மைப் போலச் செத்துப் பிறப் பதற்கு அவர் வாழ்ந்தாரா? இல்லை. இல்லை. ii.3