பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இந்தப் பாட்டில் உள்ள முறையீட்டை நாம் சொல்ல வேண்டும்; நமக்குச் சொல்லத் தெரியவில்லை. அவர் தம்மையே சொல்லிக் கொள்வதைப் போலச் சொல்லி நமக்குக் கற்பிக்கிறார். ★ சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்குஒன்று ஈகைக்கு எனைவிதித் தாய்இலை யே:இலங் காபுரிக்குப் போகைக்கு நீவழி காட்டுஎன்று போய்க்கடல் தீக்கொளுந்த வாகைச் சிலைவளைத் தோன்மரு காlமயில் வாகனனே! (இலங்கைக்குப் போவதற்கு நீ வழி காட்டுவாயாக என்று வருணனிடம் போய்க் குறையிரந்து கிடந்து, அவன் ஒன்றும் செய்யாமல் இருந்தமை யால் கடலானது தீயால் எரிய வெற்றிமாலையையுடைய தம்வில்லை வளைத்தவனாகிய ராமபிரானுடைய மருமகனே! மயில் வாகனப் பெருமானே! என்னை இந்த உலகில் பிறந்து மீண்டும் செத்துப் போவதற் காக அல்லாமல் ஒரு பொருளின்றித் தளர்ச்சி அடைந்தவர்களுக்கு அவர் வேண்டும் பொருளைக் கொடுப்பதற்காக நீ திருவுள்ளங்கொண்டு அமைக்கவில்லையே! விதித்தாய் இலையே - ஆணையிட்டு அமைக்கவில்லையே. என்று - என்று வருணனிடம் விண்ணபித்து. கொளுந்த - எரிய. வாகை - வெற்றி மாலை. சிலை - வில்) 114