பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அறம் செய் என்றும், ஐயம் இட்டு உண் என்றும் பொது வகையாக உபதேசம் செய்தவர்கள் பலர் உண்டு. அருணகிரியார் அதை மாத்திரம் சொல்லவில்லை. இரு மடங்கு ஈட்டி ஒரு மடங்கு அறம் செய்து ஒரு மடங்கு உண்டு அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். ஈட்டும் போதும் ஈயும்போதும் நுகரும் போதும் அமைதி பெறும்போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்பது அவருடைய நல்லுரை. இருபிடி சோறு கொண்டு, இட்டு, உண்டு, இரும் என்ற இந்த உபதேசம் புதுமையானது, நடைமுறைக்கு ஏற்றது. இனிய பிரான் என்ற சொற்பொழிவில், "நெற்றாப் பசுங்கதிர் என்ற பாட்டின் விளக்கம் அமைந்திருக்கிறது. இங்கே முருகப் பெருமானுடைய திருவிளையாடல்கள் யாவும் ஞான உலகக் காட்சிகளே என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கிறார் அருணை, முனிவர். வள்ளிக்கு இனியபிரான் ஞானகுருவாகிய தென்முகக் கடவுளுக்கும் இனியவன் என்று இணைத்துக் கூறுவதனால் இந்தக் கருத்தை உள்ளம் கொள்ளச் செய்கிறார். இந்தப் பாட்டில் நெற்றா என்ற புதிய சொல் ஒன்றைப் படைத்து அமைத்திருக்கிறார். அடுத்தது எங்காயினும் வரும் என்ற சொற்பொழிவு. 'பொங்கார வேலையில்' என்ற பாடலின் விளக்கம் அது. இறைவன் திருவருளும் நாம் செய்யும் அறத்தின் பயனும் எங்காயினும் வந்து உதவும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது. முன்பு செய்த அறம் பின்பு வந்து பயன்தரும் என்பதைப் பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆயினும் அருணை முனிவர் சொல்வதில் ஒரு சிறப்பு இருக்கிறது. அறத்தை நினைப்பூட்டும் போதே அதற்கு உவமையாக வைத்து இறைவன் திருவருளையும் நினைப்பூட்டுகிறார். இறைவனது திருவருள் நம்மை எப்படியாவது வந்து பாதுகாப்பது உறுதி; அது போலவே அறமும் நம்மைக் காக்கும். இந்த இரண்டு உண்மைகளையும் ஒருங்கே பெறவைக்கிறார். அவன் அருள் எங்காயினும் வந்து உதவுவதை அவர் தம் அநுபவத்தில் கண்டவர்; ஆதலின் அதனை உவமையாக்கினார். இதில் உள்ள ஐந்து பாடல்களில் மக்களைப் பார்த்து உபதேசம் செய்யும் உருவத்தில் இருப்பவை மூன்று பாடல்கள் (2,3,5) ஒன்று மக்களின் நிலையைப் படர்க்கையில் வைத்துச் 148