பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 முடியாமல், நான் சொல்கிற இந்த வழிகளில் சென்றால் அன்றி மாய்க்க முடியாத துக்கம் ஒன்று இருக்கிறது. அந்தத் துக்கத்தை உண்டு பண்ணுவதற்காகவே வருகிறவர்கள் யம தூதர்கள். அப் போது அவர்களை எதிர்த்து நிற்க இவர்கள் என்ன செய்வார்கள்?" என்று இரங்குகிறார். அறுவடைக் காலத்தில் மட்டும் அரிவாளை எடுத்துக் கொண்டு போனால் அறுக்கக் கதிர் இராது. விதைக்கும் காலத்தில் விதை விதைத்து? உரமிடும் காலத்தில் உரமிட்டு, களை எடுக்கும் காலத்தில் களை எடுத்துப் பயிரை வளர்த்தால்தான், அறுவடைக் காலத்தில் வாள் எடுத்துச் சென்றால் கதிர் அறுக்கலாம். அப்படி யம தூதரைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டுமென்றால் ஆங்காரம் அடங்க வேண்டும்; ஒடுங்க வேண்டும்; பரமானந் தத்தே தேங்க வேண்டும்; நினைப்பும் மறப்பும் அறவேண்டும். ஒரு கணமாவது ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு துங்க வேண்டும்; தொழும்பு செய்ய வேண்டும். 'இப்படிச் செய்யாதவர்கள் யம தூதர் வந்தால் அவர்களுக்கு எதிரே என்ன செய்வார்கள்?' என்று கேட்கிறார். "ஆங்காரம் அடங்காதவர்கள், ஒடுங்காதவர்கள் யமதூதருக்கு அஞ்சுவார்கள். ஆங்காரம் அடங்குபவர் அஞ்சார்; ஒடுங்குவார் அஞ்சார். பரமானந்தத்தே தேங்காதவர்கள் அஞ்சுவார்கள்; தேங்கு பவர்கள் அஞ்சமாட்டார்கள். நினைப்பும் மறப்பும் அறாதவர்கள் அஞ்சுபவர்கள்; நினைப்பும் மறப்பும் அறுபவர்கள் அஞ்சாத வர்கள். தினைப்போது அளவும் ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்காதவர் அஞ்சுபவர்கள்; தூங்குப வர்கள் அஞ்சார். தொழும்பு செய்யார் அஞ்சுவார்; தொழும்பு செய்வார் அஞ்சார்' என்று இந்தப் பாட்டில் அருணகிரியார் எதிர்மறையில் சொன்னவற்றை எல்லாம் உடன்பாடாக அமைத்துப் பார்த்தால் நாம் உய்வு பெறும் நெறி தெரிகிறது. மூன்று பகுதிகள் இதில் மூன்று பகுதிகள் உள்ளன. ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார். என்பது வரையில் ஒரு பகுதி. 124