பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஆங்காரம் என்ற சொல் அகங்காரம் என்பதன் திரிபு. ஆங்காரம் என்று சொல்லும்போது நாம் ஆகங்காரத்தைக குறிப்பு தில்லை. ஆங்காரம் உடையவன் என்றால் கோபம் உடையவன் என்கிற நினைப்புத்தான் வருகிறது. அகங்காரத்திற்கும் கோபத் திற்கும் தொடர்பு உண்டு. நான் என்ற நினைவு வரும்போது பற்று உண்டாகிறது. தன்னால் பற்றப்படுகிற பொருளை வேறு ஒருவன் பற்றினால் கோபம் உண்டாகிறது. நான் என்ற நினை வும், எனது என்ற பற்றும் வந்தால் கோபம் உண்டாகிறது. ஆங்காரம் என்ற சொல்லுக்கே கோபம் என்ற அர்த்தம் வழக்கில் வந்து விட்டது. ஆங்காரமாகிய கோபம் அடங்க அகங்காரம் என்ற செருக்கு அடங்க வேண்டும். "காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்" என்று சொல்கிற வள்ளுவர் வெகுளி என்பதை நடுவில் வைத்தார். வெகுளி என்பது கோபம். உள்ளத்திலுள்ள ஆசாபாசங்களின் வெளியீடு. மனம் உடைய எல்லாருக்கும், சாதனம் பண்ணுகிறவர் களுக்குங்கூடக் கோபம் வரும். கோபம் வராமல் இருப்பது வேறு; வருகிற கோபத்தை அடக்குவது வேறு. மனத்தில் கோபம் வராமல் இருக்கிறவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் ஒளவைப்பாட்டி, 'அறுப்பது சினம்' என்று சொல்லவில்லை. "ஆறுவது சினம்" என்று சொன் னாள். சினம் உண்டாவது மனத்தின் இயல்பு. இயல்பான ஒன்றை அறுக்க முடியாது. மனிதனுக்குக் கோபம் வருவது இயற்கை யாதலால், வருகிற கோபத்தை உடனே அறிவினால் அடக்கிவிட முயல வேண்டும். "உள்ளங் கவர்ந்தெழுந்தோங்கு சினம்காத்துக் கொள்ளும் குணமே குணம்என்க" என்று சிவப்பிரகாச சுவாமிகள் சொல்கிறார். ஒருவன் நல்லவனாக இருப்பான். மற்றவர்களிடத்தில் நயமாகப் பேசிக் கொண்டிருப்பான். அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு சினம் எழுந்துவிட்டால் அவனுக்கும் கண் தெரியாமல் போய்விடும். அவனது சுமுகமான குணம் மூர்க்கத்தனமாகி விடும். அவனால் மிகவும் மதிக்கப்படுகிறவர்கள் குறுக்கே i26