பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 விடும். இறைவன்பால் பக்தி உரம் பெறப்பெற அகங்கார மமகாரங்கள் மங்கி வரும். அதனால் கோபம் ஒழியும். 'யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்" என்பர் வள்ளுவர். அவற்றை அறுப்பது எப்படி? நம் நாட்டில் உள்ளவர்கள் பல நல்ல பழக்கத்தை உண்டாக்கி வைத்தார்கள். ஒருவர் வீடு கட்டினார். கிருகப் பிரவேசம் நடைபெற்றது. அன்றைக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் வீட்டுக்காரரைப் பார்த்து, "வீட்டை நன்றாகக் கட்டிவிட்டீர்களே' என்று பாராட்டினார். 'உம் நானா கட்டி முடித்தேன்? ஆண்டவன் திருவருளால் முடிந்தது என்று வீட்டுக்காரர் சொன்னார். இது அகங்காரத்தை மாற்றும் பழக்கம். தன் பெண்ணுக்கு ஒருவர் கல்யாணம் பண்ணினார். 'பெண் ணுக்குச் சிறப்பாகக் கல்யாணம் பண்ணிவிட்டீர்கள்' என்று சொன்னால், 'ஆம், நன்றாகப் பண்ணினேன்' என்று அவர் சொல்லிக் கொள்வாரா? "ஆண்டவன் திருவருளினால் திருமணம் இனிது முடிந்தது' என்று சொல்கிறார். இப்படி வாக்கினாலே நான் செய்கிறேன் என்று கூறுவதை மாற்றி, அவன் செய்கிறான் என்ற பேச்சையும் நினைப்பையும் உண்டாக்கிக் கொண்டால் நம்மையும் அறியாமல் இவ்வுணர்ச்சி மெல்ல மெல்ல ஆழமாக நெஞ்சிலேயும் பாய்ந்துவிடும். "ஆண்டவனே, என்னுடையது என்று இவ்வுலகில் என்ன இருக்கிறது? எல்லாம் உன்னுடையன. நான் நான் என்று எண்ணி மயங்கினேனே! நானே எங்கே இருக்கிறேன்? எங்கும் நீதான் இருக்கிறாய்' என்கிற உணர்வு உள்ளத்தில் உறைந்துவிடும். நம் நாட்டுப் பெரியவர்கள் நான் என்று சொல்வது இல்லை. 'நாம்" என்று சொல்வது வழக்கம். "நான் தனி அல்ல. நான் என்பது ஒரு சமஷ்டியில் கலந்துள்ள ஒன்று. ஒரு பெரிய சமுதாயத் தில் சேர்ந்த ஒன்று” என்று நினைத்து நாம் என்று சொல்வார்கள். சில அகங்காரிகளுங்கூட அதைப் பார்த்து, "நாம்" என்று சொல்லிக் கொள்வதுண்டு. நாம் என்பது அவர்களிடம் அகந்தையை ஒழித்துக் கொள்ளப் பயன்படுவதில்லை; அகங்காரத்தை மிகுவிக்கிறது. ஆற்றிலே குளித்து அழுக்கைப் போக்கிக் கொள்ளப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்ட கதைதான் அது. - 128