பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி மனத்தின் தீய நினைப்பு மாறி, "நான் செய்யவில்லை. எல்லாம் ஆண்டவன் செய்கிறான். எனது என்று ஒன்றும் இல்லை. எல்லாம் ஆண்டவனுடையவை' என்கிற உண்மையான ஞானம் ஒருவனுக்கு உண்டானால் அவனுக்குப் பிறரிடத் தில் கோபமே உண்டாகாது. அகங்காரம் அடங்கி விடுகிறது. இல்லாதவர்கள், ஆங்காரமும் அடங்கார்; ஒடுங்கார். ஒடுக்கம் ஒடுக்கம் என்பது வெளிப்பாட்டின் குறைவு. வெளிப் படுதலாவது யாது? நம்முடைய திரிகரணங்களின் செயல் வெளிப் பாடு. மாறுபட நினைப்பது மனத்தின் செயல். மாறுபடப் பேசுவது வாக்கின் செயல். மாறுபடச் செய்வது உடம்பின் செயல். இந்த மூன்று வகையான செயல்களும் அடங்கினால், பொறி வழியே உண்டாகும் ஐந்து வகையான அநுபவங்களும் ஒடுங்கும். வாக்கினாலே பேசுகிறோம். அது செயல். ஒரு பொருளை வாயிலே போட்டுச் சுவைக்கிறோம். அது அநுபவம். செய லுக்குக் காரணமாகக் கர்மேந்திரியங்கள் ஐந்து இருக்கின்றன. அநுபவத்திற்குக் காரணமாக ஞானேந்திரியங்கள் ஐந்து இருக் கின்றன. வாக்கு, உடம்பு ஆகிய இரண்டினுள்ளும் ஐந்து கர்மேந் திரியங்களும் அடங்கும். மற்றொன்று மனம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களினாலும் நாம் செயல் செய் கிறோம். கண் காது மூக்கு முதலிய ஞானேந்திரியங்களினாலே அநுபவிக்கிறோம். செயல்படுகிற மூன்று காரணங்களையும் அடக்கினால் அவற்றால் உண்டாகிற அநுபவங்கள் ஒடுங்கும். திரிகரணங்களின் செயல் அடங்கி, ஐந்து பொறிகளின் நுகர்ச்சியும் ஒடுங்கினால் அதை ஒடுக்கம் என்று சொல்வர். சைவ மடங்களில் ஒடுக்கம் என்று ஒர் இடம் இருக்கும். அங்கேதான் மடாதிபதி இருப்பார். கர்மேந்திரியங்கள் ஐந்தும் அடங்கி, ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஒடுங்கித் தவம் செய்கிற இடம் எதுவோ அதற்கு ஒடுக்கம் என்று பெயர். மடாதிபதியோடு உடன் இருந்து தொண்டு புரியும் அணுக்கத் தொண்டருக்கு ஒடுக்கத் தம்பிரான் என்று பெயர். பெரும்பாலும் அடுத்த தலைவராக அவரே வந்துவிடுவதுண்டு. ஒடுக்கத் தம்பிரான் என்றால் பிறரைத் தம்முடைய அதிகாரத்தினாலே மடத்தில் ஒடுக்குகிற தம்பிரான் 129