பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி ஆண்டவன் அருள் ஒளிக்கு முன்னால் நான் எனது என்கிற அகங்கார மமகாரம் இருப்பதனால் மயக்கம் ஆகிய நிழல் பற்றுகிறது; நிழல் இருள் இரண்டும் இனந்தானே? பொருள் இல்லாவிட்டால் ஒளிக்கு முன்னால் நிழல் இல்லை. நிழல் விழச் செய்யும் பொருளாகிய நான் எனது என்கிற பற்று ஒழிந்து, ஜீவபோதம் போய்விட்டால், பரமானந்தத்தே தேங்கி, இரவும் பகலும் இல்லா நிலையில், நிழல் இல்லாப் பேரொளியில், நினைப்பும் மறப்பும் அற்றுத் துரங்கலாம். 'இந்த நிலையை ஒருவரும் அடையவில்லையே! இறைவன் திருவருளினால் காலஜயம் பண்ணவேண்டுமென்று கருதி அகங்கார மமகாரத்தை ஒழிக்கவில்லையே கர்மேந்திரியங்களின் செயல் அடங்கி, ஞானேந்திரியங்களின் அநுபவம் ஒடுங்கவில்லையே! ஆங்காரம் அடங்கி ஒடுங்கினால் பரமானந்தத்தே தேங்கலாம்; அப்படித் தேங்கவும் இல்லையே! நினைப்பு மறப்பு அறவும் இல்லையே! இப்படி இருக்கிறார்களே! என்று ஏங்குகிறார் அருணகிரியார். ... ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார். இந்நிலை எல்லாராலும் எய்துதற்கு ஒண்ணாதது. இருந்தா லும் இதுவே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை எய்துவதற்குரிய வழி ஒன்று வேண்டும் அல்லவா? 'நான் முன்னே சொன்ன அத்தனையும் இந்த ஒரு வழியைப் பின்பற்றினால் போதும்; தானே வந்துவிடும்' என்று சொல்கிற அளவு மிகக் குறைந்ததான நிலையை, எல்லோரும் பின்பற்றி உய்வு பெறும் வழியை, அருணகிரியார் இப்போது சொல்கிறார். ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார், தொழும்பு செய்யார். ஓங்காரத்து ஒளி ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்குவது உயர்ந்த அநுபவம். தியானத்தில் ஈடுபட்டுச் சமாதி நிலை எய்த விரும்புகிறவர்களுக்கு மிகச் சிறந்த வழியாகும். க.சொ.1V-10 f35