பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி ஒருவன் நின்று, "இவன் முட்டாள்" என்று திட்டுகிறான். நாம் எழுந்து அவனை அடிக்கப் போவதில்லை. காரணம் உறுப்புகள் எல்லாம் இருந்தாலும் தூங்குகிறோம். அப்போது பொறிகள் உணராமல் இருக்கின்றன. மனமும் இயங்காமல் போகிறது. விழித்துக் கொண்டிருக்கும்போது இப்படி நம்மால் இருக்க முடி கிறதா? விழித்துக் கொண்டிருக்கும்போதும் இந்நிலை வரவேண்டு மானால் யான் எனது என்னும் அகந்தையை ஒழித்து, ஐம்புலன் களையும் சுட்டறுத்து, ஓங்கார ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு சமைந்துபோனால் இருக்கலாம். அதுவே தூங்காத தூக்கம். இதுபோன்ற ஒரு நிலை நமக்குச் சிலசமயங்களில், அதுவும் கணநேரம் வருவது உண்டு. மிகுந்த துக்கத்தோடு உட்கார்ந்திருக் கிறோம். அப்போது வீட்டிற்குள் என்ன நடந்தாலும் கவலைப் படுவதில்லை. கதவைத் திறந்து கொண்டு தோட்டத்திற்குள் மாடு புகுந்துவிட்டது என்றாலும் விரட்டுவதில்லை. மிகுதியான இன்பம் வரும் போதும் இப்படித்தான் எல்லாவற்றையும் மறக் கிற நிலை வரும். எல்லாவற்றையும் மறந்து தூங்குகிற துக்கம் சுகமாகத் துரங்குகிற தூக்கம். ஆனால் சுகமாகத் துரங்கினேன் என்று சொல்கிறானே, அப்போது அந்தத் தூக்கத்தை அநுபவித்துச் சொல்வது எது? மனம் அன்று. கைகால்கள் எதுவும் அப்போது வேலை செய்யவில்லை. கண்கள் மூடி இருந்தமையால் எதையும் பார்க்கவில்லை. நாக்குச் சுவை உணரவில்லை. காதும் செயல்பட வில்லை. இருந்தும், சுகமாகத் தூங்கினேன் என்றால் சுகத்தை நுகர்ந்தது யார்? அதுதான் நான். வாழ்க்கை இந்திரியங்களுடைய அநுபவம். சொப்பனம் மனத்தின் அநுபவம். கனவில்லாத சுஷாப்தி ஆத்மாவின் அநுபவம். பொறிபுலன்கள் எல்லாம் தொழில்படும் போதே நான் என்பதை யும் மறந்து தூங்கினால் எவ்வளவு சுகமாக இருக்கும். தன்னை மறத்தல் தம்மை மறந்த நிலை வேண்டுமென்றுதான் பலர் உயர்ந்த சாராய வகைகளைச் சாப்பிடுகிறார்கள். சாராயம் குடித்த அவர்கள் தம்மை மறக்கிறார்கள். தம்மை மறந்தாலும் அவர்களுடைய பொறிபுலன்கள் எல்லாம் வேலை செய்கின்றன. உடம்பு கட்டை மாதிரி கிடக்கவில்லை. அப்போது அவர்களுக்கு இருக்கிற சுகம் 139