பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா வந்துபார் சற்றுஎன் கைக்கெட்டவே என்று மார்தட்டி நின்றார். அப்படித் தொழும்பு அல்லது தொண்டு செய்ய வேண்டும் என்றால் அது எப்படி வரும்? ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கவேண்டும். அப்படித் தூங்கிச் சுகம் பெறுபவர்கள் இறைவ னுக்கும், இறைவனுடைய குழந்தைகளாகிய ஆருயிர்களுக்கும் தொண்டு செய்வார்கள். தொழும்பு செய்வதால் தொண்டாகிய அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கிடைக்கும். அந்த வாளைப் பெற்று, 'அந்தகா வந்துபார், என் கைக்கு எட்டவே' என்று அருணகிரியாரைப் போலக் கால ஜயம் உண்டாகும்படி பேச லாம். 'அப்படிச் செய்யாதவர்கள் யம தூதர்கள் வரும்போது என்ன செய்வார்கள்?' என்று கேட்கிறார் அருணகிரியார். என்செய்வார் யமதூதருக்கே? அருணகிரியாருடைய இந்தப் பாட்டு நமக்கு மிகவும் முக்கியமான உபதேசமாகும். பாட்டு மிகச் சுருக்கமாக இருந் தாலும் பல வகையான பெருக்கத்திற்கும் இடமாக இருக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பல படிகளில் உள்ள தத்துவங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. ஆங்காரம் அடங்கி ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்று, ஒங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கி, தொழும்பு செய்து காலனை ஜயம் பண்ணுவதற்கு நமக்கு வழிகாட்டியாக இருக்கும் அருமையான பாட்டு. ஆங்கா ரமும்அடங் கார்; ஒடுங் கார்பர மானந்தத்தே தேங்கார்; நினைப்பும் மறப்பும் அறார்; தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார் தொழும்புசெய் யார்என்செய் வார்யம தூதருக்கே? i42