பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் மற்றொன்றினால் பயன் இராது. இப்போதோ ஒரே கருவியின் ஒரு தலைப்பில் பேசுகிறோம். மற்றொரு தலைப்பைக் காதில் வைத்துக் கொண்டு கேட்கிறோம். இதைப் பார்க்கும்போது எனக்கு மனிதனது வாயும், காதுமே நினைப்பு வருகின்றன. வாயுடை யவன் பேசுகிறான். காது உடையவன் கேட்கிறான்' என்று இல்லாமல் வாய் உடையவன் பேசும்போதே அவனும் காது உடையவன் ஆதலால் எதிராளி பேசுவதைக் கேட்கவும் முடி கிறது. பேசவும் பேசுகிறான்; கேட்கவும் கேட்கிறான். பேசுவது அதிகம் வேண்டுமா? கேட்பது அதிகம் வேண்டுமா? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். பேச்சை வெள்ளி என்றும், மெளனத்தைத் தங்கம் என்றும் சொல்வர். (Speech is Silver and Silence is Golden) @616tsi pluffossi, gātālb a usiquit என்று நானா சொல்ல வேண்டும்? பேசுவதைவிடக் கேட்பது உயர்வுதான். அதை மற்றொரு வகையாலும் தெரிந்து கொள்ளலாம். பேசுகிற கருவியாகிய வாய் இறைவனுடைய படைப்பில் ஒன்று தான். கேட்பதற்குரிய கருவியாகிய காதோ இரண்டு உள்ளன. ஆகவே, 'ஒரு பங்கு பேசு; இரண்டு பங்கு கேள்' என்று ஆண்டவனே இவ்வகை அமைப்பினால் தெரிவித்திருக்கிறான். எப்பொழுதும் கேட்பது அதிகமாகவும், பேசுவது குறைவாகவும் இருக்கவேண்டும். இதற்கு இறைவனுடைய படைப்பே அநுகூலமாக இருக்கிறது . நாம் எப்போது பார்த் தாலும் வாயைத் திறந்து கொண்டிருப்பது இல்லை. பேசும் போது ஒலிகளைச் சரியாக வெளிப்படுத்துவதற்குப் பயன்படுகிற உதடுகள், பேசாதபோது வாயை மூடிக் கொள்ளவும் பயன்படு கின்றன. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளக் கண்ணோடு ஒட்டியிருக்கும் இமைகள் உதவுகின்றன. ஆனால் காதை மூடிக் கொள்ளக் காதுடன் இணைந்த உறுப்பு எதுவும் இல்லை. வேண்டுமென்றால் கையால்தான் மூடிக் கொள்ள வேண்டும். இல்லையானால் விமானப் பிரயாணத்தின்போது பஞ்சை வைத்துக் காதை அடைத்துக் கொள்ளுவதுபோல் எதையாவது வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும். பிறர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இரு என்பது போல ஆண்டவன், கதவு வைக்காத திறந்த வாசலுடையனவாகக் 145