பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் இருந்தாலும் தெருவோடு போகிறவன் சொன்னதைக் கேட்ட வுடன் அவள் உள்ளத்தில் ஒரு சித்திரம் தன் மகன் ஓடி வருவது போலவும் கார் அவன் மேல் ஏறிவிட்டதுபோலவும், குழந்தை இறந்து விட்டது போலவும் தோன்றிவிட்டது. உடனே உணர்ச்சி கொந்தளிக்க ஓடுகிறாள். 'சிந்திக் கிலேன்! நின்று சேவிக்கி லேன் தண்டைச் சிற்றடியை வந்திக் கிலேன் ஒன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச் சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே" என்னும் அருணகிரியாரின் பாடலை ஒருவன் பாடுகிறான். அதைக் கேட்கும்போது நம்முடைய கருத்து அந்தப் பாட்டின் பொருளோடு கலந்துவிட்டால் உள்ளம் துடிதுடிக்காதா? "ஐயோ நாம் இப்படியெல்லாம் செய்யாமல் இருக்கிறோமே!” என நினைந்து, நம்முடைய சிறுமையை எண்ணி நொந்து, உருகி உருகி விம்மாதா? - சாத்திரம் படித்தால் அறிவு வளரும். தோத்திரம் படித்தால் உள்ளம் வளரும். தோத்திரத்தைப் படிக்கும் போதும் கேட்கும் போதும் நம்முடைய சிறுமையை நினைந்தும் உருகலாம்; இறைவனுடைய பெருமையை அறிந்தும் உருகலாம். இப்படி இரண்டு வகையிலும் அநுகூலம் ஏற்படுகிறது. 'காது படைத்து விட்டால் போதாது. உருகும் கவி கேட்டு இருப்பீர்' என்று சொல்லித் தருகிறார் அருணகிரியார். வேலி தோட்டம் போடுவதானால் ஆடுமாடுகள் செடிகொடிகளை மேய்ந்துவிடாமல் இருக்க வேலி போடவேண்டும். நாலு சால் ஒட்டி உழுது நாற்று நட்டு விட்டால் போதாது. பாதுகாப்புடைய வேலியிட்டுக் களையும் எடுக்காவிட்டால் பயிர் நாசமாகிவிடும். ஒர் ஊரில் ஒரு கோயில் இருக்கிறது; அங்கே போனால் நல்ல தேவாரம், திருப்புகழ் முதலியவைகளைக் கேட்கலாம். அந்த 1.59