பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் இழியும் கவி இழியும் கவி - சுவையிலும் பயனிலும் இழிந்த கவி என்று பொருள் கொள்ளவேண்டும். நம்முடைய பண்பாடு, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றையெல்லாம் வளரும்படியாகச் செய்கிற கவி உயர்ந்த கவி. அவை அழியும்படியாகச் செய்கிற கவி இழிந்த கவி. எந்தப் பாடலைப் படிக்கும்போது நம்முடைய உண்மை யான தாழ்ந்தநிலை புலப்படுகிறதோ அந்தப் பாட்டு நம்முடைய உள்ளத் தடத்தில் திட்பத்தை உண்டாக்கிப் பண்புகளை உயரச் செய்கிறது. எந்தப் பாட்டைப் படிக்கும்போது நாம் ஏதோ உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறதோ அந்தப் பாட்டு உண்மையிலேயே நம்முடைய உள்ளத்தில் செருக்கை உண்டாக்கி நம்மைப் பண்பாட்டிலே, குணத்திலே சரிந்து விழச் செய்கிறது. 'குணங்களினால் இழிந்து, உணர்ச்சியினால் இழிந்து, சொல்லி னால் இழிந்துள்ள கவிகளைக் கற்றிடாது இருங்கள்' என்று இரண்டாவது பயிற்சியை முடிக்கிறார் அருணகிரியார். கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி இழியும் கவி கற்றிடாது இருப்பீர். "வலிய குன்று கிழியும்படி வேலாயுதத்தை எறிந்த முருகனுடைய புகழைப்பாடும் கவியை, கேட்டால் மனம் உருகும் கவியை, கேட்டு இருப்பீர்' என்பது முதல் பயிற்சி. "இழியும் கவி கற்றிடாது இருப்பீர்' என்பது இரண்டாவது பயிற்சி. இந்த இரண்டு பயிற்சி களிலும் நன்றாகத் தேறியவர்களுக்கு என்ன பயன்? யம பயம் போய் விடும்; நரகக் குழியில் விழாது தப்பிக் கொள்ளலாம். இதை அருணகிரியார் எப்படிக் குறிப்பிக்கிறார்? 'உருகும் கவி கேளுங்கள். இழியும் கவி கற்றிடாதீர்கள். இது தெரியாமல் இருக் கிறார்களே, தெரிந்தும் மறந்து இருக்கிறார்களே, அவர்களுக்குக் கொஞ்சம் சொல்லுங்கள்' என்கிறார்; அவர்களுக்குச் சொல்லும் படி சொல்லி, நாம் உணர்ந்து கொள்ளும்படி குறிப்பிக்கிறார். உருகும் கவி கேட்க வேண்டும், இழியும் கவி கற்கக் கூடாது என்பது தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு, என்ன சொல்ல வேண்டும்? † Si