பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு இருந்து விரதம் இருக்கலாமே யொழியப் பின்பு, "எங்கே சோறு இடைக்கும்?' எனத் தேடவேண்டியிருக்கும். துறவியர் நிலை "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்' - என்று வள்ளுவர் சொல்கிறார். இல்லறத்தான் இல்லறத்தை மேற்கொள்வது தன்னுடைய சுகத்திற்காக மட்டும் அல்ல. வயிறு என்பது துறவிகளுக்கும் இருப்பதால் அவர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்து அவர்களையும் காப்பாற்ற வேண்டும். 'எல்லோரும் துறந்து தவம் செய்யப் புறப்பட்டுவிட்டால் துறவிகளுக்கு யார் உணவு தருவார்கள்? அவர்களுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் மற்றவர்களாகிய இல்லறத்தார் தாம் தவம் செய்யாமல் இருக்கிறார்களோ' என்று வள்ளுவர் கேட்கிறார். சம்பாதிப்பதற்கு ஆற்றல் இல்லாத குழந்தைகளையும், ஏழை உறவினர்களையும் எப்படி இல்லறத்தான் உணவு கொடுத்துக் காப்பாற்றுகிறானோ அப்படியே கவலை இல்லாத துறவிகளை, பற்றை விட்டுப் பரமனின் தியானத்தில் எப்போதும் ஈடுபட்டி ருக்கும் ஞானிகளை, அவன் காப்பாற்றக் கடமைப்பட்டிருக் கிறான். தன்னுடைய வயிற்றைப் போலவே துறவிகளுடைய வயிற்றையும் நிரப்பும் காரியத்தை அவன் செய்து வரவேண்டும். அப்போதுதான் துறவியின் துறவறம் ஒழுங்காக நடக்கும். துறவிகள் நன்றாக வாழ்ந்தால் உலகம் ஒழுங்காக வாழும் என்று பழங்காலத்தில் நினைத்தே துறவிகளைக் காப்பாற்றினார்கள்; "துறவிகள் அன்னக் காவடிகள். இவர்களால்தான் நாடு பிச்சைக் கார நாடாகிறது' என்று அரசியல்வாதிகள் சொல்ல, துறவி களுக்குச் சோறு போடாமல் துரத்தி அடிக்கிற காலம் இப்போது வந்துவிட்டது. இல்லறத்தான் தன் கடமையை மறந்துவிட்டான். துறவிகளும் நம்மைப் போல வயிறு படைத்தவர்கள். ஆதலாலே, நாளைக்கு வேண்டிய உணவுக்கு என்ன செய்வது? எந்த இல்லறத் தானும் சோறு போட மாட்டானே என்று எண்ணிப் பணம் வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. க.சொ. W-12 13了