பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு நேரம் இல்லாமல் இருந்தாலும் பசி வந்துவிட்டால் உணவை உண்ண நேரத்தைக் கண்டுபிடிக்கிறான். மனிதன் வாழ்வது அவன் முயற்சிக்குள் அடங்கவில்லை; ஆனால் சாப்பிடுவது அவன் முயற்சி யினால் உண்டாகிறது. நியாயமான முறையில் சம்பாதித்து சாப்பிடுகிறான்; அல்லது திருடி உண்ணுகிறான்; எப்படியாவது உண்டுவிடுகிறான். உண்ணுவது என்பதை விட்டால் உடம்பு இராது. 'அப்படி உண்ணும் போது இறைவனை நினைக்கும் பழக்கத்தைச் செய்துகொள்' என்கிறார். உடம்பு சோற்றால் எடுத்த வீடு; தினந்தோறும் சாப்பிடுவதே இந்த உடம்பை வளர்ப் பதற்காகத்தான். - உயிர் போன உடம்பு இப்படி உணவு தின்று தின்று வளர்க்கும் உடம்பு எத்தனை நாளைக்கு இருக்கும்? சாகிற வரைக்கும் இருக்கும். செத்த பிறகு இது எங்கும் போவது இல்லை; இதை எரித்து விடுகிறார்கள்; அல்லது புதைத்து விடுகிறார்கள். 'எத்தனை எத்தனையோ வித மான உணவுப் பொருள்களினாலே கட்டப்பட்ட உடம்பாயிற்றே! இதை வைத்துக் கொள்ளலாம்” என்று யாராவது வைத்துக் கொள்ளுகிறார்களா? இந்தச் சரீரத்தினால் இன்பம் கண்டவர்கள் கூட, மனைவி மக்கள்கூட, இறந்துவிட்டால் இரவுக்கு இரவா கவே இதை எடுத்துக் கொண்டு போய்க் கொளுத்திவிட வேண்டும் என்கிறார்கள். இந்த உடம்பின்ால் வருகிற இன்பத்திற் காக மனையாட்டி, நாயகன் என்னுடன் தனித்து இருக்க மாட்டானா? அங்கே யாரும் இல்லாமல் இருக்க மாட்டார்களா?” என்று ஏங்கித் தவிக்கிறாள். அவளே நாயகன் இறந்துவிட்டால் அவன் சரீரத்தை வைத்துக் கொண்டு தனித்திருக்கப் பயப்படு கிறாள். துணைக்குப் பத்துபேர் இருக்க வேண்டுமென்று விரும்பு கிற்ாள். அந்தச் சரீரத்தைகக் கட்டி தழுவித் தனியாக இருக்க முயற்சி பண்ணினவள் இன்றைக்கு அந்தச் சரீரம் தனியாக இருந் தாலும் அதன் அருகில் செல்ல அஞ்சுகிறாள்; மற்றவர்களும், "நேரமாகிவிட்டது. இனிப் பிணம் கிடக்கக்கூடாது. எடுத்துக் கொண்டு போய் எரிக்க வேண்டும்' என்கிறார்கள். அதைக் கொளுத்துகிற வரைக்கும் யாரும் சாப்பிடுவது இல்லை. கொள்ளி வைத்து விட்டுத்தான் இலையில் உட்காரு கிறார்கள். அதைக் 1.69