பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு என்று சொல்வர். மனிதனுடைய ஊன் யாருக்கும் ஊணாகிறது இல்லை. அதனால்தான் இறந்துவிட்டால் இந்த உடம்பை எரித்து விடுகிறார்கள். எரித்துவிட்ட பிறகு ஒரு பிடி சாம்பருங்கூட இந்த உடம்பில் இருந்து கிடைப்பது இல்லை. ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே. நம்முடைய உடம்புதான் ஒரு பிடி சாம்பரும் காணாது; பெரிய அரசர்களுடைய உடம்பானால் அதிக சுகபோக உணவு களை உண்டு வளர்த்த உடம்பாகையால் மலை அளவு சாம்பல் கிடைக்கும்' என்று நினைக்கலாமா? பட்டினத்தார் உபதேசம் 'முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னி னம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேஅறி வாரில்லையே' என்று பட்டினத்தார் சொல்கிறார். பட்டினத்தார் பெரிய மாளிகையில் வாழ்ந்தவர். நிறையச் செல்வத்தைப் பார்த்தவர். நாள்தோறும் பல வகையான பண்டங் களை உண்டு வளர்த்து வரும் இந்த உடம்பு கடைசியில் என்ன ஆகிறது என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டுவோர் போல மயானக் கரைக்குச் சென்றார். முதல்நாள் எரிந்த பிணம் மறுநாள் பிடி சம்பல்கூட இல்லாது போனதைக் கண்டார். 'சாதாரண மக்களுடைய பிணத்துக்குத்தான் ஒரு பிடி சாம்பல்கூட வராது போலிருக்கிறது என்று நினைத்தார். அடுத்த நாள் பெரிய அரசன் ஒருவன் இறந்து போனான். அவன் உடம்பைக் கொண்டுவந்து எரித்துவிட்டுப் போனார்கள். அந்த அரசனுடைய உடம்பும் எரிந்து கடைசியில் ஒரு பிடி சாம்பல்கூட இல்லாதுதான் போயிற்று. அதுவும் மயான மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. இதைக் கண்டார். பின்புதான், "முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதும் கண்டு' என்று அவர் சொல்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.