பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- مم سی: ، بعه -- متم f ங்காரர் சொற்பொழிவுகள் - 4 متنا 'இதைக் கண்டும் மக்களுக்கு ஞானம் உண்டாகிறதா? மேலும் இவ்வுலக வாழ்க்கையின் சுகத்தை அதிகப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்களே தவிரப் பொன்னம்பலத்தில் நடமிடு கிற பெருமானுடைய குஞ்சித பாதத்தைச் சார்ந்து நாமும் உய்வு பெறவேண்டுமென்று நினைக்கிறவர்கள் யாரும் இல்லையே!” என்று வருந்தி எங்குகிறார் பட்டினத்துப் பிள்ளையார். இந்த உடம்பு முடிவில் அழிந்துபோய் ஒரு பிடி சாம்பரும் இல்லாமல், மண்ணோடு மண்ணாகப் போகும் என்பதை நம்மில் பலர் உணராதவர்கள் அல்ல. 'இந்த அறிவு இருப்பதனால் இது வாழும்போதே ஒரு காரியம் செய்யலாம் அல்லவா?’ என்று சொல்ல வருகிறார் அருணகிரியர். ஈட்டுதலும் இடுதலும் 'இறைவனை நம்பி வாழ்ந்தால் சாப்பாடு கிடைக்குமா? வையத்தை மறந்து வானத்தைப் பார்த்தால் வாழ முடியுமா?" என்று சில அறிவாளிகள் பேசுவதுண்டு. "இறைவன் திருவருளைப் பெற வேண்டுமானால் நீ சாப்பிடாதே; சம்பதிக்காதே; சாப்பிடா மல் பட்டினி கிட என்று யாரும் சொல்வதில்லை. மிகவும் சாதாரண நிலையில் இருக்கும் நமக்கு உபதேசம் செய்ய வருகிற அருணகிரியார், 'நன்றாக இருமடங்கு சம்பாதி; சாப்பிட்டுச் சுகமாக வாழ்ந்து கொண்டிரு' என்றுதான் இந்தப் பாட்டில் உபதேசம் செய்கிறார். ஆனால், சம்பாதிப்பது, சாப்பிடு து ஆகிய இரண்டுக்கும் நடுவில் ஒன்று இருக்க வேண்டும். |ண்டவனை மறந்தவர்கள், சம்பாதிப்பதற்கு முயற்சி செய்யும் பாது பொருள் ஈட்ட வேண்டும் என்கிற வெறியில் தப்பான ழியில் சென்று ஈட்டுவார்கள். பிறகு, ஈட்டிய பொருளைப் பிறர் கண்டுவிட்டால் என்ன செய்வது? திருடன் கொண்டுபோய் விட்டால் எண்ண பண்ணுவது?’ என்ற அச்சத்தினால் எப்போதும் செத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டவனுடைய நினைப்பு உடையவர்கள் அப்படிப்பட்ட மற நெறியில், தப்பான வழியில், பொருளை ஈட்டமாட்டார்கள். ஈட்டிய பொருளைப் பாதுகாக்க வேண்டுமே என்று அஞ்சவும் மாட்டார்கள். ஆகவே, நீங்கள் ஒரு பங்குக்கு இரண்டு பங்காக {ಿ) ೯೯. பனை நினைந்து பொருளை ஈட்டுங்கள்; இறைவனை நினைந்து این سمیع