பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு ஆதலால் பொருபிடி காவல சண்முகவா என்று சாற்றி இருங்கள்; அமைதியாக இருங்கள்' என்று உபதேசம் செய்கிறார். சம்பாதிப்பது இரண்டு பிடி இடுதல் ஒரு பிடி: உண்ணுதல் ஒரு பிடி கடைசியில் ஒன்றும் இல்லாமையினால் அமைதியாக இருக்கும் நிலை விளைகிறது. தனக்கு மிஞ்சித் தான தர்மம் "நீ சம்பாதிப்பதைப் பிறருக்குக் கொடுத்துவிடு. நீ சாப்பிடாதே" என்று சொன்னால் உலகம் அந்த உபதேசத்தை ஏற்காது. 'தனக்கு மிஞ்சித் தான தர்மம்' என்று வழங்குகிற பழ மொழியைச் சொல்லி எத்தனை பேர், "எனக்குக் கண்டு மிஞ்சினால் அல்லவா ஐயா உனக்குக் கொடுக்க?' என்று சொல்லிப் பிச்சைக்காரர்களை விரட்டுகிறார்கள்? 'தலைக்கு மிஞ்சிப் போய்விட்டான்' என்றால், "என்னைக் காட்டிலும் அவன் உயர்ந்துவிட்டான்' என்று பொருள். தனக்கு மிஞ்சித் தான தர்மம் என்றால் தன்னைக் காட்டிலும் உயர்வாக இருப்பது தான தர்மம் என்று கொள்ள வேண்டும். ஒரு பிடிதான் இருக்கிறது. நமக்குப் பசிக்கிறது; அப்போது வேறு ஒருவன் வந்து கேட்கிறான் என்றால் அவனுக்கு அதைக் கொடுத்து விட வேண்டும். தன்னையும் மிஞ்சியது தர்மம். மதுரை மாநகரின் பெருமையைப் பற்றிச் சொல்ல வருகிற பரஞ்சோதி முனிவர், "தம்மை மாறியும் புரிவது தருமம்அந் நாடு” என்று பேசுகிறார். மாறுதல் - விற்றல். தம்மை விலைக்கு விற்றா வது தர்மத்தைக் காப்பாற்றுகிறது அந்நாடு என்கிறார். தர்ம புத்திரர் அதைச் செய்தார். அரிச்சந்திரன் அதைச் செய்தான். நமக்கு இல்லாவிட்டாலும் அவனுக்கு இடவேண்டும் என்கிற நினைப்பு உடையாருக்கு மனம் தீய வழியில் செல்லாது. அந்த நிலைக்கு ஏற்ற மனப் பக்குவம் அடையாத நம்மைப் பார்த்து அருணகிரியார், சாப்பிட வேண்டாம், சம்பாதிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இறைவனை நினைந்து இரண்டு மடங்கு சம்பாதியுங்கள். ஒரு மடங்கு இடுங்கள். ஒரு மடங்கு சாப்பிடுங்கள். பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்துவிட்டோம் என்ற அமைதியாக இருங்கள்' என்று உபதேசம் செய்கிறார். 175