பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காச் சொற்பொழிவுகள் . 4 தருபிடி காவல! சண்முகவா எனச் சாற்றி நித்தம் இருபிடி சோறு கொண்டு, இட்டு உண்டு இரும். உண்ணும்போது இறைவன் நினைவு நாம் எல்லாரும் சம்பாதிக்கிறோம்; சாப்பிடுகிறோம். 'நான் சம்பாதிக்கிறேன்; நான் சாப்பிடுகிறேன்" என்கிற நினைவோடு இவற்றைச் செய்கிறோம். நம்முடைய பெரியவர்கள் உண்ணும் போது, 'கோவிந்தா, மகாதேவா, முருகா' என்று ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடுவார்கள். உண்ண வாயும், எடுத்துப் போடக் கையும், இலையில் அன்னமும் கொடுத்தவன் இறைவன் என்கிற நினைவோடு அப்படிச் செய்வார்கள் என்பது மட்டும் அன்று; மற்றொரு பயனும் உண்டு. உண்ணும் போது எந்த உணர்ச்சியோடு உண்ணுகிறோமோ அந்த உணர்ச்சி உண்ட சோற்றினால் மிகுதியாக விளைகிறது என்பர். குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்போது, வீரக் கதை களை நினைந்து கொடுத்தால் வீர உணர்ச்சி பாலோடு சேர்ந்து குழந்தையிடத்திலே மிகுதியாக உண்டாகும் என்பார்கள். சாப்பிடும் போது காதில் எது விழுந்தாலும் அது நன்றாக மனத்தில் பதியும். இதை நம்முடைய சொந்த அநுபவத்தில் பார்க்கலாம். நம்மிட மிருந்து ஒன்றை வேண்டிப் பெறுவதற்கு, நம்முடைய மனையாட்டி மற்றச் சமயத்தில் சொல்லிப் பெறுவதைக் காட்டிலும், சாப்பிடும் போது சுவைமிக்க உணவுப் பொருள்களைப் படைத்து விட்டு, இனிமையான சொல்லாலே தனக்கு வேண்டியவற்றை மெள்ளச் சொல்லுகிறாள். உடனே அதெற்கென்ன? அதை வாங்கிக் கொள்' என்று சொல்லி விடுகிறோம். இப்படி உண்ணுகிறபோது நினைக்கிற ஒன்று நிச்சயமாக வாழ்வில் பதிவை உண்டாகும். ஆகையால் நாம் சாப்பிடும் போது இறைவனை நினைந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் அந்தச் சோறு நம் உடம்பில் உறைக்கும் போது நிச்சயமாக உள்ளத்திலும் இறை வனுடைய நினைப்பு உறைக்கும். அப்பர் சுவாமிகள் இறைவனைப் பார்த்துச் சொல்கிறார். "அப்பா, உன்னை நான் எவ்வாறு புகழ்வேன்! இவ்வுலகிலே எனக்கு இன்பத்தைத் தருகிறது பொன் என்றால் அந்தப் பொன் னாகவே நீ இருக்கிறாய்; இன்பத்தைக் கொடுப்பது மணி என்றால் 3. §