பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ត្. --- இருபிடி சேறு அந்த மணியாகவே நீ இருக்கிறாய்; இன்பத்தைத் தருகிற எல்லாப் பொருளாகவும் நீ இருப்பதோடு அவற்றை அநுபவிக்கும் போது போகமாகவும் நீ விளங்குகிறாய் உன் பெருமையை நான் எவ்வாறு சொல்வேன்' என்கிறார். "பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேற்புகழ்தக்க பொருளே யுன்னை என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே?" இப்படி அப்பர் சுவாமிகளைப்போல நாமும் சாப்பிடும் போதெல்லாம் இறைவனை நினைக்க வேண்டாமா? 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்று வள்ளுவர் பேசுகிறார். செய்த நன்றியைக் கொல்லாமல் இருக்க வேண்டுமானால் பொருளை ஈட்டும்போதும் பொருளை ஈட்டுவதற்குரிய கருவி கரணங்களைக் குறைவில்லாமல் கொடுத்த இறைவனை நினைக்க வேண்டும். ஈட்டிய பொருளைப் பிறருக்கு இட்டு உண்ணுகிறபோதும் இறைவனை நினைக்க வேண்டும். பூசைபண்ணுகிறார் பழைய காலத்தில் யாராவது ஒருவர் வீட்டுக்குச் சென்றால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவருடைய வீட்டுக்காரி, 'ஐயா பூசை பண்ணுகிறார்; கொஞ்சம் உட்கார்ந்து இருங்கள்; வருவார்' என்று சொல்லிப் போவாள். 'சாப்பிடு கிறார்; பூசை பண்ணுவதாவது?’ என்று நமக்குத் தோன்றலாம். சாப்பிடுவதாவது என்ன? வெளியே இருக்கிற இறைவ. துக்கு மலராலும் இலையாலும் பூசை பண்ணிவிட்டு; இறைவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டே அவர்கள் ஒவ்வொரு பிடியாகச் சாப்பிடுகிறார்கள். வெளியில் இருக்கும் இறைவன் உள்ளேயும் இல்லையா? வெளியில் உள்ள இறைவனுக்கு மலரினால் அர்ச்சனை பண்ணுவது போல, உள்ளே இருக்கிற இறைவனுக்கு அன்னத்தினால் அர்ச்சனை செய்கிற செயலாக அது அமைவதால், சாப்பிடும் போதுகூடப் பூசை பண்ணுகிறார் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இப்படிப் பெரியவர்கள் சாப்பிட்டாலும்,