பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மூச்சுவிட்டாலும், நடந்தாலும், ஒடினாலும் இறைவனையே நினைத்தார்கள். "செப்புவதெல் லாஞ்செபம்நான் சிந்திப்ப தெல்லாம்நின் ஒப்பில் தியானம்என ஒர்ந்தேன் பராபரமே!" 'நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!” என்று பேசுவார் தாயுமானவர். அவரைப் போல எந்தச் செயலைச் செய்தாலும் இறைவனை நினைந்தே செய்கிற பெருமக்கள் பலர் இருந்தார்கள் நம் நாட்டில். இப்போது சம்பாதிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மாத்திரம் தெரிந்து கொண்டிருக்கிற நம்மைப் பார்த்து, 'சம்பாதிக்காதே, சாப்பிடாதே" என்று சொல்லாமல், 'நன்றாகச் சம்பாதியுங்கள்; இரு மடங்கு சம்பாதியுங்கள்; இறை வனை நினைந்து இரண்டு மடங்கு சம்பாதியுங்கள்; இறைவனை நினைந்து ஒரு மடங்கு கொடுத்து விடுங்கள்; இன்னொரு மடங்கை இறைவனை நினைந்து நீங்கள் உண்ணுங்கள். பின் அவனை நினைந்து சுகமாக இருங்கள்' என்று உபதேசம் செய்கிறார் அருணகிரியார். தருபிடி காவல! சண்முகவா எனச் சாற்றி நித்தம் இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும். சாற்றிச் சோறு கொண்டு, சாற்றி இட்டு, சாற்றி உண்டு, சாற்றி இரும் என்று ஒவ்வொன்றோடும் கூட்டவேண்டும். 'நாம் சம்பாதிக் கிறோம்; நாம் சாப்பிட்டுவிட்டு மீதியைத்தானே யாருக்காவது கொடுக்க வேண்டும். அதில் சரி பாதியைப் பிறருக்குக் கொடுத்து விட்டு எஞ்சியதைத்தான் சாப்பிட வேண்டும். இட்டு என்று சொல்லிவிட்டுப் பின்புதான் உண்டு என்கிறார். ஒளவைப்பாட்டி யும். "ஐயம் இட்டுண்' என்று இடுதலை உண்ணுவதற்கு முன்னே வைத்துச் சொன்னாள். கொடுக்கும்போது இறைவன் நினைவு 'சம்பாதிக்கும்போது இறைவனை நினைந்து சம்பாதிக் கிறேன். சாப்பிடும்போது இறைவனை நினைந்து சாப்பிடுகிறேன். கொடுக்கும்போதும் கூடவா இறைவனை நினைக்க வேண்டும்?" என்றால் கொடுக்கிறபோதும், 'தருபிடி காவல சண்முகவா' 1了8