பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மற்றொரு பக்கத்தில் பெண் யானை ஒன்று ஆண் யானையை மோதுகிறது; பொருகிறது. அந்த ஆண் யானை அதை இன்பமாக எண்ணி விளையாடுகிறது; 'சீ, சீ. ஆண் யானைக்கு வீரம் இல்லை போலிருக்கிறது ஆண் யானையைப் போல வந்தவனுக்குங் கூடப் பெண் யானையைப் போலப் பொருகிற வேடிச்சியிடம் பயமா இவனுக்கு வீரம் இல்லை' என்று சொல்லலாமா, இப்படிப் பொருவது, சண்டை போடுவது, விளையாட்டு வகையைச் சார்ந்தது; பார்ப்பதற்கு என்னவோ பிடி பொருவ தாகத் தோன்றினாலும் அது ஊடலின் விளைவு. தோற்றவர் வெல்லுதல் உலகத்தில் வாழ்கிற நம்முடைய குடும்பங்களில் இந்தச் சண்டை நாடகங்கள் எத்தனை நடக்கின்றன அலுவலகத்தி லிருந்து கொஞ்ச நேரம் கழித்து வருகிறார் வீட்டுக்காரர். அவ்வளவுதான் அம்மா காளியாகக் காட்சி அளிக்கிறாள். உள்ளே நுழையும் போதே குழந்தையிடம் தம்மைப் பற்றிக் காரசாரமாகத் தாக்கிப் பேசுவது கேட்கிறது. 'போடா, இந்தக் காபியைக் கொண்டு போய் உன் அப்பாவிடம் கொடு' என்று தான் வராம லேயே பிள்ளையை அனுப்புகிறாள். பிள்ளையாண்டான் என்ன நினைக்கக்கூடும்? அப்பா பயங்கொள்ளி போலிருக்கிறது. இத்தனை பேசுகிறாள் அம்மா; இவருக்கு ரோசம் இருந்தால் இதைப் பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பாரா?' என்று நினைக்கலாம். எவனொருவன் அந்தக் கோபத்தையும் சண்டையையும் உண்மையாக நினைத்துத் தன் மனையாட்டியிடம் தானும் கோபித்துச்சண்டைக்குப் போய்விடுகிறானோ அவன் காதலின்பத்தை இழந்துவிடுகிறான். வள்ளுவர் சொல்கிறார்; “ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும் 'உண்மைக் காதல் உடைய பெண்கள் கோபமாக எதிர்த்து ஊடும் போது அவர்களை எதிர்த்துத் தாமும் சண்டைக்குப் போகாமல் அவர்களை எதிர்க்க ஆற்றாதவரைப் போலத் தாழ்ந்து போகிற வர்கள், அந்தச் சமயத்தில் தோற்றவர்களைப் போல இருந்தாலும் அவர்களே வெற்றியை அடைவார்கள் என்கிறார் வள்ளுவர். வெற்றி எப்போது தெரிகிறது? 184