பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான் தருபிடி காவல! சண்முகவா எனச் சாற்றி நித்தம் இருபிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் கழியுமானால் வாழ்வு முழு வதும் இன்பமயமாகி விடும். நாள் பல சேர்ந்து மாதம் ஆகின்றன; மாதங்கள் ஆண்டு ஆகின்றன; ஆண்டுகள் வாழ்வு ஆகின்றன. உபதேசம் இறைவன் நினைப்போடு ஒவ்வொரு பிடி சோறும் உள்ளே போகும்போது உள்ளம் வளர்கிறது. உள்ளம் வளர்ந்தால் அன்பு விளைகிறது. அன்பு இல்லாவிட்டால், தானே சம்பாதித்து, தானே உண்டு, இறைவனுடைய நினைப்பு இல்லாமல் இருப்பான். அவன் உள்ளம் வளராது. உடம்புதான் வளரும். வெறும் ஊன் வளரும். இந்த வளர்ச்சி கடைசியில் எப்படி ஆகிறது? வினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே. இது மாயாத உடம்பு அல்ல; மாய உடம்பு நிலையில்லாத வஞ்சனையான உடம்பு. எந்தச் சமயத்தில் உயிரை இது வெளியே போகவிடும் என்ற சொல்ல முடியாது. 'நிலையில்லாத இந்த மாய உடம்பை வளர்ப்பதற்காகப் பொழுதை எல்லாம் செலவிடு கிறீர்களே! இறந்தால் இந்த உடம்பு என்ன ஆகும்? புண்ணியம் பாவம் ஆகிய இரு வினைக்கு உட்பட்டிருக்கிற நாம் இறந்தால் இந்த உடம்பு ஒரு பிடி சாம்பரும் காணாது. இது நிலை என்ற நம்பிக்கையோடு இதை வளமுடையதாக்கச் சம்பாதிப்பதும் சாப்பிடுவதுமாக இருக்கிறீர்களே; இதில் பயன் இல்லை. உள்ளத்தை வளமுடையது ஆக்க, அன்புடையது ஆக்க, முயற்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் சம்பாதியுங்கள்; சாப்பிடுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இறைவனை நினைந்து சம்பாதியுங்கள். இறைவனை நினைந்து சாப்பிடுங்கள் இரண்டுக்கும் நடுவில் இறைவனை நினைந்து சம்பாதிப்பதில் பாதியைக் கொடுத்துவிடுங்கள். பின்பு இறைவனை நினைந்து அமைதியாக இருங்கள். ஒவ்வொரு நாளும் இதுவே செயலாக இருங்கள்' என்று வயிற்றைப் படைத்துவிட்டு, வயிற்றுக்காகவே வாழ்நாளைச் செலவிட்டுக் கொண்டிருக்கிற நமக்கு உபதேசிக் 188