பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் தங்காரம் பண்ணின ஞானமூர்த்திக்கு இனியவன். அவனுக்குப் பிரியமான குழந்தை' என்று அவர் பின்னே நினைப் பூட்டுகிற போது, "இவனா? காட்டில் தினைப் புனத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த குறத்தியிடம் காதல் கொண்டவன், நீல வள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரானாகத் திரிந்தவன் அல்லவா இவன் தகப்பனார் மிக்க நல்லவர். காமனைத் தகனம் பண்ணின அந்தத் தகப்பனாருக்குப் பிள்ளையாகப் பிறந்து இவன் காமுக னாகத் திரிந்திருக்கிறான். அவர் ஒழுக்கம் உடையவர். இவன் ஒழுக்கம் இல்லாதவன் போலிருக்கிறது' என்று சொல்லலாம் போலத் தோன்றுகிறது. அப்படி நினைக்கும்படி அருணகிரியார் சொல்வாரா? நல்ல அறிவும், அநுபவமும், மரபும் தெரிந்தவர்கள் சரியானபடி உணர்ந்து கொள்வார்கள் என்கிற நினைப்பில் தான் இந்த இரண்டையும் ஒரு சேர வைக்கிறார். முதலில் வள்ளி கல்யாணத்தைச் சொல்லி, பின்பு தட்சிணாமூர்த்தியின் கதையைச் சொல்கிறார். முன்னுக்குப் பின் முரணா? 'முருகன் வள்ளியெம் பெருமாட்டியிடம் காதல் கொண்டது காமம். தட்சிணாமூர்த்தியின் தன்மை ஞானம்' என்று இரண்டை யும் வேறு பிரித்துப் பார்க்கலாமா? இவை இரண்டும் ஒரு கதையில் இரு வேறு பிரிவுகள். ஒன்று மூலம்; ஒன்று முடிவு. முடிவை முதலில் சொல்லி, மூலத்தைப் பின்னே சொன்னார். கதையின் முதல் அத்தியாயத்திற்கும், கடைசி அத்தியாயத்திற்கும் தொடர்பு இருக்கும் அல்லவா? அவர் அமைத்த சொற்களைக் கவனியுங்கள். நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான்' என்கிறார். பிறகு, 'சங்க்ராம வேளும்பட, விழியால் செற்றார்க்கு இனியவன்' என்கிறார். இனிய பிரான் என்றாலும், இனியவன் என்றாலும் பொருள் ஒன்றுதான். வள்ளியெம்பெருமாட்டியின் முற்றாத, இளமையையுடைய தனத்துக்கு இனிய பிரானாக இருந்து கொண்டே காமனைச் சங்காரம் பண்ணின சாமிக்கும் இனியவனாக நடிக்கும் பொல் லாத பிள்ளை போலிருக்கிறது! எனத் தோன்றுகிறது அல்லவா? பெரும் கவிகள் ஒன்றோடொன்று பொருத்தம் இல்லாதவை போல இப்படித்தான் சில கருத்துக்களை இணைத்து அறிவுடை 189