பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் நல்லவர்கள் செயல்படாது ஒடுங்கிவிட்டால் கெட்டவர்களுடைய செயல்கள்தாமே ஓங்கி நிற்கும்? அப்போது தேவர்கள் ஒன்றுகூடி யோசித்தார்கள். இதற்கு என்ன செய்வது? தூங்கு மூஞ்சிச் சாமியை எழுப்பியாக வேண்டுமே! யோகத் தூக்கத்திலிருந்து விழிப்புறச் செய்ய வேண்டுமே அவர் விழித்தால் அல்லவா உலகம் உய்வுபெறும்? அவரை எப்படி விழிப்படையச் செய்வது? என்று கூடி ஆலோசித்தார்கள். 'மன் மதனை அனுப்ப வேண்டியது தான்; உலகத்தைக் காப்பாற்றும் பிள்ளை நமக்கு வேண்டுமானால் இப்போது மன்மதன்தான் வேலை செய்தாக வேண்டும்' என்று முடிவு செய்து அவனை அனுப்பித் தட்சிணாமூர்த்தியின் தியானத்தைக் கலைக்கச் சொன் னார்கள். அந்த ஞானமூர்த்தியின் முன்னாள் அவன் உடம்பெல் லாம் நடுங்கப் போய் நின்றான். காமன் செயல் உலகத்தையே மயக்குகிறவன் மன்மதன். அவன் அழகு மிக்கவன்; மென்மை மிக்கவன்; மதுரமானவன். அவனுடைய அரசு, படைகள் எல்லாம் அழகியவை. அழகுதான் மன்மத னுடைய ராஜ்யம். அவன் கையில் இருக்கிற வில் கரும்பு; அது இனியது. அந்தக் கரும்பு வில்லுக்கு வண்டுகளின் கூட்டமே நாண், வண்டின் ரீங்காரமே நானொலி என்றால் எவ்வளவு இனிமையாக இருக்கும் நாணில் வைத்துப் பூட்டுகின்ற அம்பு களோ ஐந்து மலர்கள். மலர்கள் அழகுக் குவியல்கள். அவனுக்கு முன் ஊதும் திருச்சின்னம் குயில். அவன் கூடவே இருக்கிற துணைவன் வசந்தன். அவனுக்கு யானை இரவு. குதிரை கிளி. தேர் தென்றல். முரசு கடல். அவனுடைய படை பெண்கள். இப்படிக் காமத்தைத் தூண்டும் பொருள்களை எல்லாம் வைத் திருக்கிறவன் காமன்; எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்! ஞானமூர்த்தி கல்லால மரத்தடியில் ஞானமுத்திரையோடு யோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய யோகத்திற்கு இடையூறு விளைவிக்கக் காமன் வந்தான். அவன் வரும்போதே தென்றல் மெல்ல மீதுர்ந்து வந்து தென்முகக் கடவுளின்ட் உடலைத் தழுவிற்று. இராத்திரியாகிய யானை மதம் பொழிய நின்றது. அவனுடைய காகளமாகிய குயில்கள் கூவ ஆரம்பித்து - 195