பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் தாமரைக்கு இருப்பதுதான். எலும்பு இல்லாத புழுக்கள் செத்துப் போகின்றன என்றால் அவற்றிற்குத் தாங்கும் சக்தி இல்லை. எப்படி வெயில் எலும்பு இல்லாத புழுக்களைக் கொன்று விடுமோ அப்படி அன்பு இல்லாதவர்களை அறக்கடவுள் கொன்று விடும் என்று சொன்னார். கொல்லப்படுவதற்குக் காரணம் கதிரவன் அல்ல. அவற்றின் வலியின்மையே இறந்து படுவதற்குக் காரண மாகிறது. சூரியனுடைய ஒளி பொது தாமரை அதைத் தாங்கும் ஆற்றல் உடையது; அதை ஏற்று மலரும் தன்மை உடையது. எலும்பு இல்லாத புழுவோ அதைத் தாங்கும் சக்தியற்றதாகை யால் இறந்து போகிறது. அவ்வண்ணமே, தட்சிணாமூர்த்தி காமனை எரிக்க வேண்டு மென்று நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. ஞானமூர்த்தி, யோக சமாதியில் அமர்ந்திருந்த தவப் பெருமான், தன் ஞானக் கண்ணைத் திறந்தான். ஞானத்திற்கு முன்னால் காமம் நிற்குமா? ஞானத்தின் வலிமையைத் தாங்கும் வல்லமை இல்லாத மன்மதன், தன்னுடைய பலவீனத்தால் எரிந்து போனான். காமன் இறந்து பட்டானே என்று அவன் மனைவி ரதி வருந்த, 'யாக்கை இல்லாதவனாகவே அவன் இனியும் இயங்குவான். ஆனால் உனக்கு மட்டும் யாக்கை உடையவனாகத் தோன்றுவான்' என்று சிவபெருமான் வரம் அளித்தான். முருகன் அவதாரம் . அப் பெருமானுடைய யோகம் கலைந்துவிட்ட மகிழ்ச்சி யினால், திரும்பவும் அவன் யோகத்தில் அமர்ந்து விடுவதற்குள் அவனிடம் ஒடிச் சென்று காலில் விழுந்த தேவர்கள் தங்க ளுடைய துயரத்தைச் சொல்லி, "நாங்கள் உய்வு பெற ஒரு குமாரனை வழங்க வேண்டும்; உலகம் ஒரு குமாரனை விரும்பு கிறது” என்று வேண்டி இறைஞ்சினார்கள். சிவ பெருமானுடைய அருள் பின்னும் விரிவு பட வேண்டும் என்பது அவர்களுடைய அவா. ஆதலின், "ஆயவெஞ் சூரன தாவி நீக்கவோர் சேயினை அருளுவான் சிமைய மாகிய மீயுயர் வரையிடை மேவி நோற்றிடும் மாயையின் மனைவியை மணத்தல் வேண்டும்நீ" 197