பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 என்று வேண்டிக் கொண்டார்கள். இறைவன் பார்வதியை மணந்து கொண்டான். அப்பால் எம்பெருமான் கண்களிலிருந்து ஆறு பொறிகள் எழுந்தன. அவற்றிலிருந்து குமாரன் தோன்றி னான் என்கிற வரலாறு நமக்குத் தெரியும். மாரனுடைய சமாதியின்மேலே குமாரன் பிறந்தான். மன்மதனை எரித்ததும் குமாரனைத் தோற்றுவித்ததும் நெற்றிக் கண்ணே. ஒரு காரியம் செய்வதற்குமுன் அதற்கு ஏற்ற மனநிலையில் (Mood) இருக்க வேண்டும் என்பார்கள். உலகத்துக் குமார ஜனனம் போன்றதன்று முருகன் திரு அவதாரம். அது காம சம்பந்தமே இல்லாதது. ஞானமாக விளைவது. ஆதலின் அந்த நிகழ்ச்சி தோன்று வதற்கு முன் காமன் யார் கண்ணிலும்படாதபடி ஒழிந்தான். வேளைச் செற்றார்க்கு இனியவன் தென்முகக் கடவுளாகிய ஞானமூர்த்திக்கு இனியவனாக ஞானபண்டித சாமியாகத் தோற்றியவன் முருகன் என்பதை அருணகிரியார் கூறுகிறார். இக்கு முல்லையுடன் பற்று ஆக்கையும் வெந்து, சங்க்ராம வேளும் படவிழியால் செற்றார்க்கு இனியவன். இக்கு என்பது இr என்ற வடசொல்லின் திரிபு. இக்கு - கரும்பு. அது மன்மதனுக்கு வில். அவனுடைய வில்லாகிய கரும்பு இனிப்புடைய பொருள். அதிலே அவன் தன்னுடைய அம்பாகிய ஐந்து மலர்களை வைத்துத் தொடுக்கிறான். தாமரைப்பூ மாம்பூ, அசோகம்பூ, முல்லைப் பூ நீலோற்பல மலர் என்னும் ஐந்தும் அவனுடைய அம்புகள். பரமேசுவரன் தவ நிலையில் இருக்கும் போது இந்த மன்மதன் முதலில் தாமரைப் பூவாகிய பாணத்தை விடுத்தான். அது தன்னுடைய மென்மையையும் தண்மையையும் மணத்தையும் பரப்பிக் கொண்டு போய் எம்பெருமானின் திரு வடியில் வீழ்ந்தது. - - மலரம்புகள் காமன் தாமரை மலரை எய்தால் அது மற்றவர்களுக்குத் தம் காதலிமார் நினைவை இருதய தாமரையிலே உண்டாக்கிவிடும். j98