பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மன்மதன் தன்னுடைய கரும்பு வில்லில், தாமரையாகிய முதல் அம்பை வைத்துக் தொடுத்துப் பரமேசுவரனது தியான சமாதிக்குப் பங்கம் விளைவித்தபோதே இறைவன் தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை எரித்திருக்கலாம். 'போனால் போகிறது. தன்னுடைய அறியாத் தனத்தால் செய்கிறான். ஞான மூர்த்தி தன்னுடைய ஞானக்கண்ணை விழித்தால் காமம் எரிந்து விடும் என்பதுகூடத் தெரியாமல் விளையாடுகிறான் என்று விட்டு விட்டான், கண்ணைத் திறக்கவில்லை. மன்மதன் சும்மா போயிருக்கக் கூடாதா? தன்னுடைய இரண்டாவது அம்பாகிய மாம்பூவைத் தொடுத்தான். எம் பெருமானின் திருமேனி காமத் தீயினால் அலைப்புற்றுப் பசலை பூத்தால் தியானம் கலைந்து விடும் என்பது அவன் நினைவு. மன்மதன் இரண்டாம் முறை யாகத் தவறு செய்தபோதிலும் இறைவன் தன்னுடைய சிறந்த கருணையினால் பேசாமல்தான் இருந்தான். மூன்றாவது பாண மாகிய அசோகத்தையும் விட்டுவிட்டான் மன்மதன். ஒருமுறை தவறு செய்தாலேயே நாம் பொறுக்க மாட்டோம். மன்மதன் மூன்றாம் முறையாகச் செய்த பிழையையும் பொறுத்துக் கொண்டு எம்பெருமான் சும்மா இருந்தான். ஆனால் நான்காவது பாணமாகிய முல்லையை எடுத்து வில்லில் பூட்டினான். இனியும் பொறுக்கலாமா? ஏதோ ஒரு முறை தெரியாது செய்துவிட்டான் என்று விடலாம். இறைவன் மூன்று முறையும் பொறுத்துக்கொண்டான். மூன்று முறை பொறுப்பது என்பது பெரியவர்கள் வழக்கம். அதற்குமேல் தண்டிப்பது தான் முறை. நான்காவது முறையாகக் காமன் தவறு இழைக்கக் கரும்பு வில்லில், வண்டுகளென்னும் நாணிலே, முல்லையாகிய அம்பை எடுத்து வைத்தானோ இல்லையோ, ஞானமூர்த்தி தன் கண்ணைத் திறந்து விட்டான். எல்லாம் வெந்து விட்டன. கரும்பு வில் எரிந்தது. அதிலே கட்டிய நாண், பூட்டிய முல்லை அம்பு, வில்லைப் பிடித்திருந்த கை, உடம்பு எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. சங்க்ராம வேளும் பட சங்க்ராம வேள் - போர் செய்த மன்மதன். ஆண்டவன் செய்த தவத்திற்கு உதவியாக மன்மதன் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டு, அவனுடைய திருவடியை 2OO