பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தினைக் கதிர்களும் இளமை நிலையிலேயே இருந்தன. அவை இன்னும் முதிரவில்லை; கதிர்கள் முற்றவில்லை. கவிஞரின் புதிய படைப்பு நெற்றா - நெற்று ஆகாத, நெற்று என்பது பெயர்ச்சொல். அதன் அடியாக நெற்றா என்ற எதிர்மறைப் பெயரெச்சத்தை உண்டாக்கிக் கொண்டார் அருணகிரியார். நெற்றுதல் - நெற்றாதல்; நெற்றாத - நெற்று ஆகாத; அது ஈறுகெட்டு நெற்றா என்று நின்றது. பெரிய கவிகள் இப்படித்தான் புதுப்புதுச் சொற்களை உண்டாக்குவார்கள். கம்பன் சில புது நடைகளை உண்டாக்கி இருக்கிறான். “ஓம் நராயணாய' என்று ஓர் இடத்திலே அவன் உபயோகப்படுத்துகிறான். கம்பன் போன வழி என்று ஒரு வழக்கு உண்டு. அவன் இலக்கணம் அறிந்தவன். இலக்கணம் அவனிடம் நிரம்பி வழிந்தது. அவன் பழைய மரபை மாற்றிப் புதிதாக ஒன்று சொன்னால் அதுவே இலக்கணமாகி விடும். இது பெருங் கவிஞர்களின் உரிமை. 'கம்பன் இலக்கண வரம்பை மீறித் தன் விருப்பப்படி சொல் அமைக்கிறானே, நாங்களும் ஏன் அப்படிப் புனையக் கூடாது? என்பதுபோலக் காளமேகம் வேடிக்கையாக ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். 'நாராயணணை நராயணனென் றேகம்பன் ஓராமற் சொன்ன உறுதியால் - நேராக வாரென்றால் வர்என்பேன்; வாளென்றால் வள்என்பேன் நாரென்றால் நர்என்பேன் நன்." பெரும்புலவர்கள் தாம் எழுதுவதே இலக்கணமாக, சட்ட மாக ஆக்கிவிட்டுப் போகிறார்கள். அருணகிரிநாதப் பெருமான் இறைவன் அருள்பெற்ற பெரும் புலவர்; "யாம்ஒ தியகல் வியும்எம் அறிவும் தாமே பெறவே லவர்தந் ததனால் 2C2