பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் இரண்டாவது பிள்ளையிடம் போய் ஒரு மாதம் இருந்திருப் பார். அவனுடைய மனைவி மூத்தவளையும்விடக் கெட்டிக்காரி. அவள் தன் கணவனிடம், "என்ன, உங்கள் அப்பா இங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டாரோ? திரு நெல்வேலியில் நான்கு மாதம் இருப்பதற்குள் போதும் போதும் என்று அவர்களே விரட்டிவிட்டார்கள் போலிருக்கிறது. அங்கே அவமானப்பட்டு தான் இங்கே வந்து தங்கிவிட்டாரோ? எதற்காக இப்படி நகரங்களில் இருந்து அல்லற்படவேணும்? சிவனே என்று காவேரிக்கரையில் போய்ச் சுகமாக வாழலாமே. வேண்டு மானால் மாதம் இருபது ரூபாய் அனுப்பி விடுகிறது" என்றாள். இதைக் கேட்டவுடன் கிழவருக்கு அழுகை அழுகையாக வந்தது. சொந்தப் பிள்ளைகள். இவர்களைப் படிக்க வைத்தவன் நான். இவர்களுக்கே என்னுடய சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். என்னை வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டிய இவர்கள் என்னைக் கிராமத்திற்குத் தனியாக அனுப்பி விட்டுப் பணமாக உதவி செய்யப் போகிறார்களாம். இவர்கள் பணமும் வேண்டாம்; இவர்கள் என்னைக் காப்பாற்றவும் வேண் டாம். இவர்கள் கண்ணிலேயே படாமல் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறேன் என்று காசியை நோக்கி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டார். காசியில் நிகழ்ந்தது வடக்கே போனவருக்குப் பல விதமான துன்பங்கள் உண்டா யின. உடம்புக்கு நோய் வேறு வந்துவிட்டது. கங்கைக்கரையில் ஒரு நாள் மிகவும் சலிப்பு அடைந்த மனத்தோடு, 'ஆண்டவனே! என்னை இன்னும் ஏன் உயிரோடு வைத்துத் துன்பத்துக்கு உள்ளாக்குகிறாய்?" என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டு உட்கார்ந்தார். சட்டென்று அந்தப் பக்கம் போன ஒருவன் அவரைக் கூர்ந்து பார்த்தான். 'யார் சுவாமி நீங்கள்? எந்த ஊர்?" என்று கேட்டான். வடக்கே இந்தி மொழியே வழங்கக்கூடிய இடத்தில் அவர் தமிழில் பேசியதைக் கேட்டு, அவனும் தமிழன் ஆதலால் அவ்வளவு அன்போடு கேட்டான். 'நானா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்' என்றார் அவர். 213