பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் புதிய மகிழ்ச்சியை அடையாது. துன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் அவலப்படாது. "நன்றாங்கால் நல்லவாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற்படுவ தெவன்" என்பது திருக்குறள். நல்லதுதான் வேண்டும், தீயது வேண்டாம் என்று சொல் வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டையும் ஒரே மாதிரியாகப் பார்க்க வேண்டும். ஆண்டவனுடைய அடியார்கள் அப்படித்தான் உணர்கிறார்கள். நாம் ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு போகிறோம். அவன் வெளியூருக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டே போகிறோம். ஒருகால் வந்திருக்க மாட்டானா என்கிற நினைப்பு. அப்போது தான் அவனும் ஊரில் இருந்து வந்திருப்பான். முதல்நாள் போயிருந்தால் அவனைப் பார்த்திருக்க முடியுமா? சில மணி நேரங்கள் முன்பாகப் போயிருந்தாலும் அவனைப் பார்த்திருக்க முடியாது. ஆண்டவன் அருள் அல்லவா இப்படிக் கூட்டி வைத்தது?’ என்று நினைத்துக் கொள்வதே முறை. நாம் நிச்சயமாக ஒன்றை நம்பிக் கொண்டிருக்கும் போது அது அப்படியே நடந்து விடுகிறது. அப்போது அதிருஷ்டம் என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். 'ஆண்டவன் திருவருள் அவ்வாறு வந்து உதவுகிறது என்று நினைக்கும்படி இந்தப் பாட்டில் அருணகிரியார் குறிப்பிடுகிறார். இறைவன் அருள் முன்அறிவிப்பு அனுப்பிவிட்டு வராது. இறைவனிடத்தில் பக்திசெய்ய வேண்டும். நம்மை எப்படிக் காப்பாற்ற வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். நாம் நினைக்கிறபடி எல்லாம் வேலை செய்யும் வேலைக்காரனா அவன்? குழந்தை கேட்கிறபடி எல்லாம் உணவுப் பண்டங்களைக் கொடுத்து விட்டால் குழந்தை உருப்படுமா? பலாப்பழம் வேண்டு மென்று குழந்தைக் கத்துகிறது. தாய் அதை அதன் கண்ணில் படாம லேயே ஒளித்து விடுகிறாள். குழந்தை மாந்தம் வந்து துன்பப்பட்டு இறந்துவிடக்கூடாது என்கிற மேலான கருணையால் அப்படிச் செய்கிறாள். நம்முடைய ஆத்மாவுக்கு இன்பம் அளிப்பது எது, துன்பம் அளிப்பது எது என்று நமக்கு எப்படித் தெரியும்? எம் 219