பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பெருமான் அல்லவா, நாம் உய்வு பெற வேண்டும் என்ற கருணை உள்ளத்தோடு அருள் செய்து கொண்டிருக்கிறான், 'டாக்டர் கொடுக்கிற மருந்து கசப்பாக இருக்கிறதே என்றால் அது நம் நோயைப் பொறுத்தது. நம்முடைய பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப ஆண்டவனுடைய அருள் துன்பமாகவும் வரலாம்; இன்பமாகவும் வரலாம். டாக்டரிடத்தில் நம்பிக்கை வைத்து, கசப்பு மருந்தாய் இருந்தாலும், இனிப்பு மருந்தாய் இருந்தாலும் விருப்புவெறுப்பு இன்றிச் சாப்பிடுவதைப் போல, துன்பமாக இருந்தாலும், இன்பமாக இருந்தாலும் ஆண்டவ னிடத்தில் நம்பிக்கை வைத்து, இரண்டையும் அவன் திருவரு ளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். துன்பம் இன்பம் கலந்த வாழ்வில் ஆண்டவன் அருள் என்பது தனியாக வருவது இல்லை. அவையே அவனுடைய அருள்தான். இத்தகைய மனப்பாங்கு வந்துவிட்டவர்கள் இடுக்கண் வந்தால், அதைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நமக்குத் துன்பம் வந்தால் நெஞ்சு நடுங்குகிறது. இன்பம் வந்தால் கிளுகிளுப்பு உண்டாகிறது. துன்பத்தைத் துன்பம் என்று பார்க்காமல் ஆண்டவனின் அருள் என்று நினைப்பார்க்கு, 'எந்நாளும் துன்பமில்லை' என்று உறுதி வந்துவிடும். ஒருத்திக்கு இடுப்பு வலி எடுக்கிறது. மிகவும் வேதனைப்பட்டுக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் முகத்தைக் கண்டவுடனே அவளுக்கு அந்த வேதனைகள் மறந்து போகின்றன. எல்லையில்லா மகிழ்ச்சி உண்டாகிறது. அவளுடைய துன்பத்தின் முடிவு இன்பமாக இருப்பதனாலே அந்த வேதனையை அவள் நன்மையாகவே கருதுகிறாள். நாம் அநுபவிக்கிற துன்பங்கள் எல்லாம் நம்முடைய பாவங்களைக் கழுவுகின்றன என்கிற நினைப்புடையாருக்குத் துன்பம் ஒன்றும் செய்வதில்லை. துன்பத்தை அநுபவிக்கும்போது அது ஆண்டவனுடைய திருவருள் என்ற நினைப்பும், அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக் கையும் உண்டாகும். அருள் வரும் வழி இறைவனுடைய திருவருள் எப்படிக் காப்பாற்றும் என்று சொல்ல முடியுமா? ஒரு பாலைவனத்திலே போய் நிற்பான். 22O