பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்று அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான். அவ்வழியே போகிறவன் தனக்காக எடுத்துச் செல்லும் இளநீரை இவனுக்குக் கொடுத்து விடுவான். ஆண்டவன் திருவருள் இவன் தாகத்திற்கு இளநீராக வரும். எம்பெருமானின் அருள் எங்கு வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது; எங்காயினும் வரும். இவன் வாழ்க்கையில் மிகவும் அல்லற்பட்டவனாக இருப் பான்; இவனை வைத்துத் தாங்கும் சிறந்த பிள்ளையாக வரும்; அடுத்த பிறவியில் இவனைப் பெரிய பணக்காரன் என்று எல் லோரும் போற்றக் கூடிய செல்வமாக வரும். அதைப் போலவே யாசிப்பவர்களுக்கு இடுவதும் வீணாகப் போகாது. எங்காயினும் வரும் என்று சொல்கிறார் அருணகிரியார். 3 பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது. (வேலை - சமுத்திரம். பொங்கு ஆர வேலையில் - முத்துகளையுடைய பொங்கும் சமுத்திரத்தில்.) முத்துக்கள் உண்டாகும் சமுத்திரத்தில் வேலை ஏவிய வனுடைய அருள்போல, ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும் என்கிறார். 'இறைவன் அருள் இன்ன இடத்தில் இப்படி வரும், இப்படி உபகாரம் செய்யும் என்று சொல்ல முடியாமல் எங்காயினும் வந்து உதவி செய்வது போலவே, இரப்பவர் களுக்குத் தர்மம் செய்கிற பொருளும் வந்து உதவும். இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல; வேறு உலகத்தில் வேறு பிறவி யிலும் வந்து சாரும். வேளாண்மை செய்தால் விளைவு உண்டு என்பது போலவே பிறருக்குக் கொடுத்தால் அதற்கும் விளைவு உண்டு' என்கிறார் அருணகிரியார். கடல் சுவற வேல் விட்டவன் சூரபன்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் போர் நடந்தது. என்ன என்ன உருவங்களையோ எடுத்துக் கொண்டு சூரன் எதிர்த்தான். எல்லாவற்றையும் முருகன் அழித்துக் கொண்டே 221