பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வந்தான். இனி அப்பெருமானிடத்தில் இருந்து தப்ப வழி இல்லையே என்று அஞ்சி அவன் மாமரமாக உருவெடுத்து, கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான். மிகமிகப் பாவியாஇறு அவனுக்குக் கடல் ஒளிய இடம் கொடுத்தது. ஆறுமுகநாதன் தன் திருக்கரத்தில் இருந்த வேலைக் கடலுக்குள் விட்டான். அது சுவறிப்போக அதற்குள் கிடந்த முத்துக்களும் மணிகளும் பளிச்சுப் பளிச்சு என்று ஒளிவிட்டன. சூரபன்மன் தலைகீழாக ஒரு மாமரமாய் இருப்பதும் தெரிந்தது. தன் வேலினால் மாமரத்தைப் பிளந்து, அதற்குள் இருந்த சூரனும் மாளச் சங்காரம் பண்ணினான் எம்பெருமான். சேவற்கொடியாகவும் மயில்வாகன மாகவும் அவனை ஆக்கிக் கொண்டான். கடல் முத்துக்களை மாத்திரம் வைத்துக் கொண்டிருந்த போது அதனிடம் முருகனுக்குச் சினம் இல்லை. பிறருக்குத் தீங்கு பண்ணிக் கொண்டிருந்த, பிறருடைய இன்ப வாழ்வைக் குலைத்து கொண்டிருந்த, சூரனுக்கு ஒளிய இடம் கொடுத்த போதுதான் அதனிடத்தில் அவனுக்குக் கோபம் வந்தது. தண்ணீர் சுவறிப் போகும்படியாக வேலை விட்டான். கெட்டவனை உள்ளே கொண்ட கடலைச் சுவறிப் போகும் படி வேலை விட்ட முருகவேள் நல்லவர்களுக்கு நல்லவன். நம் மனத்தில் கெட்ட எண்ணங்கள் ஒளிய இடம் கொடுக்காமல் அற நினைவுகளை வைத்துக் கொண்டு அவனிடத்தில் பக்தி செய்து வாழ்ந்தால் அவனுடைய அருள் எங்காயினும் வந்து உதவும். அப்படியே யாசிப்பவர்களுக்கு நாம் இடுவதும் வீண் போகாமல் எங்காயினும் வந்து உதவும். 4 இது தெரிந்தும், ஆண்டவனிடம் பக்தி கொள்ளாமல் பொருளை ஈட்டி, அதைப் பிறருக்குக் கொடுக்காமல் தமக்கே பயன்பட வேண்டும் என்று பலர் சேமித்து வைத்துக் கொள்ளுகிறார்களே, அவர்களைப் பார்த்து அருணகிரியார் ஒன்று சொல்ல வருகிறார். வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும் சங்காதமோ கெடுவீர் உயிர் போம்அத் தனி வழிக்கே? 222