பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் "அடப்பண்ணி வைத்தார்; அடிசிலும் உண்டார்; மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்; இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்; கிடக்கப் படுத்தார்; கிடந்தொழிந் தாரே' அத்தனை அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. யாவும் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவைபோல இருக்கும். எதுவரை வரும்? "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே என்பார் பட்டினத்தார். பணம், உத்தியோகம், வீடு எல்லாம் வீட்டில் இருக்கிறவரைக்குந்தான். உயிர் இருக்கிற வரைக்கும் அநுபவிக்கலாம். உயிர் போம் காலத்தில் அவை பயன்படுமா? கூட வருமா? வரா. அவை வீட்டோடு சரி. அன்புடைய மடந்தை யராவது கூட வருவார்களா? “விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே." கிராமங்களில் பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது தெரு முனை வரையில் வருவார்கள். சுடுகாட்டுப் பக்கம் திரும்பிய வுடனேயே அவர்கள் ஆற்றுக்குப் போய்விடுவார்கள். ஆகவே பெண்களும் வீதிமட்டுந்தான் வருவார்கள். அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? அவர்களும் சுடுகாட்டோடு நின்று விடுவார்கள்; "விம்மிவிம்மி இரு கைத்தல மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே' அப்போது நம்மைத் தொடர்ந்து வருவன எவை? 'பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார் பட்டினத்தார். 225