பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மறுமையை நோக்கிச் செல்லும் வழி. அ. உலகறி சுட்டு. இட்டது வரும். இடாதது வராது என்பது கருத்து. - - ஆசைகள் மூன்று என்று சொல்வார்கள். பொன்னாசை, மண்ணா,ை பெண்ணாசை என்பவை அவை. இந்தக் காலத்தில் மண்ணா,ை என்பதற்குப் பொருளே வேறாகி விட்டது. நாடு பிடிக்க ஆசைப்படுவது மண்ணாசை விரிவான நிலங்களை வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்வதும் மண்ணாசையே. தனக்கென்று வாழும் இடம் ஒன்று பெற விரும்புவதும் மண்ணாசைக்கு இனமென்றே கொள்ளலாம். அப்படி வைத்துக் கொண்டால் இங்கே அருணகிரியார் மூவகை ஆசைக்கும் உரிய பொருள் களைச் சொல்கிறார் என்று கூறலாம். வங்காரத்தில் உள்ள விருப்பம் பொன்னாசை, சிங்கார வீட்டில் மேலுள்ள ஆசை மண்ணாசை, சிங்கர மடந்தைபால் உள்ள பற்றே பெண்ணாசை. இப்படியே மூன்று ஆசை களைச் சொல்லும்போது, மண்ணாசையாக இல்லத்தின் மேலுள்ள ஆசையைச் சேர்த்துக் சொல்வது அருணகிரியாருக்கு இயல்பு. 'அகமாடை மடந்தையர் என்று அயரும், சகமாயை' என்று கந்தர் அநுபூதியில் பாடுகிறார். அங்கே அகம் - வீடு; மாடை - பொன்; மடந்தையர் - பெண்கள். இங்கே வங்காரம் என்பதை அங்கே மாடை என்றார்; சிங்கார வீடு என்பதை அகம் என்றார்.) - இது கந்தர் அலங்காரத்தில் 59-ஆவது திருப்பாடல்.