பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி 1 மனிதனுக்கு வரும் துன்பங்கள் இரண்டு வகை. ஒன்று உடம்பினால் அநுபவிப்பது. மற்றொன்று மனத்தினால் அநுபவிப்பது. ஒருவகையில் எல்லாமே மனத்தினால் அநுபவிக்கின்ற துன்பங் களே என்றாலும், வெறும் நினைப்பினாலே அநுபவிக்கும் துன்பம் ஒரு வகை; சரீர உணர்ச்சியோடு நினைப்பும் சேர்ந்து நுகரும் துன்பம் மற்றொரு வகை. இருவகைத் துன்பங்கள் உடம்பிலே தோன்றிய கட்டியை மருத்துவர் அறுத்து மருந்திடுகிறார். அறுப்பதற்கு முன் மயக்க மருந்து கொடுக்கிறார். அவர் அறுவை மருத்துவம் செய்யும்போது உடம்பிலிருந்து ரத்தம் வருகிறது. ஆனால் அந்தத் துன்பத்தை நோயாளி உணர்வதில்லை. மனமும் உடம்பும் ஒட்டி இயங்காததால் இந்த நிலை உண்டா கிறது. உடம்பிலே துன்பத்துக்குரிய காரியம் நிகழ்ந்தாலும் அதை மனம் உணராவிட்டால் துன்பம் இருப்பதில்லை. ஆனால் உடம்பில் துன்பத்துக்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்றும் இல்லா விட்டாலும் மனம் துன்பத்தை அடையும். கனவிலே திருடன் துரத்துவதாகக் கண்டால் அப்போது துயரம் உண்டாகிறது. ஆனால் உடம்புக்கும் அந்த உணர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. மனம் மாத்திரம் அந்த அநுபவத்தை அடைகிறது. முன்பு எப்பொழுதோ வந்த துயரத்தை இப்போது நினைந்து துயர் அடைகிறோம். வேறு யாருக்காவது துன்பம் நேர்ந்தாலும் அதைக் கண்டு பெரியவர்கள் துன்புறுகிறார்கள். நாளைக்கு இந்தத் துன்பம் வருமே என்று இப்போதே வருந்துகிறோம். இத்தகைய சமயங்களில் துன்பத்துக்குக் காரணமாக செயல் ஏதும்