பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி சிந்திக் கிலேன் நின்று சேவிக்கி லேன்தண்டைச் சிற்றடியை வந்திக் கிலேன்ஒன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச் சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேன்உண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே. ஏழு காரியங்களைச் சொல்கிறார் அருணகிரியார் ஏழு காரியங் களில் முதல் ஐந்தும் இறைவனோடு தொடர்புடைய செயல்கள். சிந்தித்தல், நின்று சேவித்தல், சிற்றடியை வந்தித்தல், வாழ்த் துதல், முருகனைச் சந்தித்தல் என்பவை எனலாம். முருகனோடு சம்பந்தப்பட்டவை. பொய்யை நிந்தித்தல், உண்மை சாதித்தல் இரண்டும் பொதுவானவை. இப்படி இறைவனுடைய தொடர்பு டையவை ஐந்து, இறைவனுடன் தொடர்பு இல்லாதவை இரண்டு ஆகிய ஏழு காரியங்களைச் செய்திருந்தால் மனத்தில் துன்பம் இராது; உடம்பில் உண்டாகின்ற துன்பமும் இப்போது இராது என்பதைக் குறிப்பாகப் பெற வைக்கிறார். இறைவன் திருவுருவம் இறைவன் எங்கோ இருக்கிறான் என்று சொல்கிற வேதத்தைக் காட்டிலும் நம் அருகில் இருக்கிறான் என்று சொல்கிற அநுபவ பூர்வமான வாக்கு மிகச் சிறந்தது. இறைவன் உருவம் உடைய வனாய் இருக்கிறான். நாம் கோயில்களில் காணும் உருவம் வேறு; அது நம்முடன் பேசாது; இயங்காது. அவனுடைய மெய்யான உருவத்தை, பேசி இயங்கும் தேஜோ மய உருவத்தை, அநுபவத்தால்தான் காண முடியும்; புறக் கண்ணால் காண ஒண்ணாது. அநுபவத்தில் அவன் திருவுருவத்தைக் காண்பதற் குரிய மனப் பக்குவம் நமக்கு வேண்டாமா? அப்பக்குவத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனுடைய கல்யாண குணங்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அக்குணங் களுக்கேற்ற உருவம் ஒன்றைப் பெரியவர்கள் நம் கண் காணச் சமைத்துத் தந்திருக்கிறார்கள்; இயங்கும் உருவத்தைக் காணாத வர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுவது போன்றது இது. 239