பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி காலையில் வந்து விடுங்கள். காபி சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பத்திரிகையைப் பார்ப்பார். அதற்குள் பார்த்தால் தான் பார்த்தது' என்று எவ்வளவு இடங்களில் சொல்கிறார்கள் இவர்கள் எல்லோரையும்விடப் பெரிய பணக்காரனாகிய ஆண்டவனைப் பார்க்க வேண்டும், அவனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அது எப்படி எளிதில் முடியும்?' என்று தோன்றும். இந்தப் பணக்காரர்களைப் போன்றவனா ஆண்டவன்? இவர்கள் பணம் கிடைக்கக் கிடைக்கத் தங்களையும்விட அதிகப் பணக்காரர்களையே தேடி ஒடுகிறார்கள். ஏழையைக் காணாமல் விலகி நிற்கவே விரும்புகிறார்கள். சொந்தத் தங்கை, மிகவும் வறுமையுள்ள இடத்தில் வாழ்க்கைப்பட்டவள், 'வருகிறேன்' என்றால், “இங்கே ஏன் வருகிறாய்? இப்போது இங்கே என்ன வேலை? வராதே' என்று விரட்டி அடிக்கிறார்கள். அவர்கள் நெருங்கினால் கைப்பணம் செலவாகி விடுமோ என்று அஞ்சு கிறார்கள். ஏழைகளைக் கண்டு விலகி ஓடியோடித் தம்மையும் விடப் பணக்காரர்களுக்குத் தாசர்களாக உறவு கொண்டாடுவார்கள். ஆனால் ஆண்டவனாகிய பணக்காரன் இவர்களைப் போன்ற வனா? எங்கே ஏழை, எங்கே ஏழை என்று ஏழைகளைத் தேடிக் கொண்டு போகிறான். அவன் ஏழை பங்காளன், தீனரட்சகன். பணத்தால் செருக்கு அடைந்து தன்னிடம் வருபவர்களைக் கண்டு வெறுக்கிறவன். பணம் இல்லாத பரம ஏழைகளை நாடித் தேடிக் கொண்டு ஒடுகிறான், அவர்களுக்கு உதவி செய்ய. உலகத்திலுள்ள அத்தனை பணக்காரர்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அவனிடம் இருக்கும் பொருளுக்கு ஈடாகச் சொல்ல முடியுமா? அவனைக் காட்டிலும் வேறு யாராவது நமக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் கொடுக்கக் கூடிய செல்வன் உண்டா? "செல்வாய செல்வம் தருவாய் மதுரைப் பரமேட்டி" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். செல்வர் யார்? உலகத்தில் யார் பணக்காரன் என்று தேடிக் கொண்டே போனார் ஒருவர். இவன் பணக்காரன் என்று ஒருவனிடம் 243