பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நமக்குப் புந்திக் கிலேசமும், காயக் கிலேசமும் இருக் கின்றன. இந்தக் கிலேசம் போகவேண்டுமானால் ஆண்டவ னுடைய உதவி வேண்டும். அவன் நமக்காகவே காத்துக் கொண்டிருக்கிறான். அவனோடு நாம் தொடர்பு வைத்துத் கொள்ள வேண்டும். அதற்கு என்ன வழி? 2 ஏழையின் கதை மிக்க ஏழை ஒருவன், ஒரு பெரிய பணக்காரன் தனக்கு உதவி செய்வான் என்று எண்ணி அவனிடம் போகிறான். அவன் இவனை ஒரு குமாஸ்தாவாக நாற்பது ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான். காலையில் ஏழு மணிக்கே போக வேண்டும். சில சமயங்களில் வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியும் ஆகலாம்; பத்து மணியும் ஆகலாம். மிகவும் துன்பப்பட்டுக் கொண்டு வேலை செய்து வருகிறான். தூங்கி எழுந்து காரியாலயத்துக்கு ஒடும்போதே எங்கே நேரமாகி விடுமோ என்கிற பயம். முன்பு நேரமாகிப் போனதனால் எச்சரிக்கை செய்திருக்கிறார்களே என்கிற வருத்தம். இன்றைக்கு நேரம் கழித்துப் போனால் என்ன செய்வார்களோ, வேலையை விட்டே துரத்திவிடுவார்களோ என்கிற வேதனை வீட்டிலோ குழந்தைக்கும் மனைவிக்கும் உடல் நலம் சரியில்லை. அவர்கள் துன்பப்படும்போது வீட்டில் இருந்து உதவு முடியவில்லையே என்கிற மன வருத்தம்; வறுமையினால் ஏற்படுகிற வாட்டம்; ஆக இத்தனை துன்பத்தோடு - உடல் துன்பம், மனத் துன்பத் தோடு - அன்றாடம் காரியாலயத்திற்கு ஒடி ஒடிப் போவதும் ஒடி ஒடி வருவதுமாக நகர வேதனையை அநுபவித்துக் கொண்டிருக் கிறான். பெரியவர் உபதேசம் ஒருநாள் ஒரு பெரியவர் அவனைப் பார்த்தார். 'ஏன் அப்பா, நீ இப்படி வருத்தமுற்றுக் கொண்டிருக்கிறாய்? நீ காரியாலயத் துக்கு எந்தச் சாலை வழியாகத் தினமும் காலையும் மாலையும் போய்வருகிறாயோ, அந்தச் சாலையிலேயே ஒரு பணக்காரன் 246