பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி நின்று சேவித்தாயா? அவன் உன்னைக் கண்டு கொண்டானா?” என்றார். "சுவாமி! நீங்கள் சொன்னபடியே நான் தினமும் காரியா லயம் போகும்போதும் வரும்போதும் அவரது மாளிகையின் முன் நின்று ஒரு கும்பிடு மாத்திரம் போட்டு வருகிறேன். அவர் வீட்டுக்குள் போக வேண்டுமென்ற ஆசை தோன்றுகிறது; பிடர் பிடித்து உந்துகிறது. முன்பின் தெரியாத அவரது வீட்டுக்குள் எப்படி நுழைவது என்று சற்று வெட்கமாக இருந்தது. ஆனாலும் யார் யாரோ போய் வந்து கொண்டிருக்கிறார்களே என்று நானும் நேற்றுத்தான் உள்ளே நுழைந்தேன்." 'நுழைந்தாயா? அவனைக் கண்டு கொண்டாயா? அவனது பார்வை உன்மேல் படும்படியாக வீழ்ந்து வணங்கினாயா? யார் யாருடைய காலிலேயோ தினமும் நீ வீழ்ந்து வீழ்ந்து வணங்கு கிறாயே; அந்தப் புண்ணியமூர்த்தியின் திருவடியை வந்தித் தாயா?" என்று அந்தப் பெரியவர் மிகவும் உற்சாகமாகக் கேட்டார். அந்தக் குழந்தை 'அதுதானே இல்லை சுவாமி எனக்கு அந்தப் பணக்காரர் யார் என்று கண்டு கொள்ள முடியவில்லையே! அந்த வீட்டுக் குள்ளே ஒரே கூட்டமாக இருந்தது. ஒரு பெரிய பீடத்தின் மேலே சின்னக் குழந்தை உட்கார்ந்திருந்தது. அந்தக் குழந்தையை எல் லோரும் வணங்கினார்கள். அந்தக் குழந்தையின் காலிலேகூட..." 'தண்டை இருந்ததா? சிலம்பு இருந்ததா? அந்தக் குழந்தை தான் அப்பா நான் சொன்ன பணக்காரன். மிக்க கருணையாளன். தான் இருப்பது தெரியாமல் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருக் கிறவர்களின் கவனத்தை எல்லாம் திருப்புவதற்காகத்தான் அந்தக் கருணையாளன் தண்டையும் சிலம்பும் அணிந்திருக்கிறான். பெரியவர்களாக இருந்தால் தம்மிடம் வருபவர்களுடைய தகுதி, தராதரம் ஆகியவற்றைப் பார்த்து, அவற்றிற்கேற்பப் பேட்டி யளித்து உதவி செய்வார்கள். அவன் குழந்தை. தன்னுடைய அன்பர்களின் தகுதி முதலியவற்றைப் பார்க்கமாட்டான். அன்போடு தன்னைச் சிந்தித்துச் சேவித்துத் தண்டைச் சிற்றடியை வந்திப் பவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் அவன். அவனைப் 249