பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 துன்பத்தினால் மூன்று வகையான விளைவுகள் உண்டாகின் றன. துன்பம் வருவதற்கு முன், அது வந்துவிடுமே என்று அஞ்சுகிறான். துன்பம் வந்தவுடனே துடித்துப் போகிறான். துன்ப நிகழ்ச்சி நேர்ந்துவிட்ட பிறகு, "ஐயோ! நமக்கு இப்படி வந்ததே' என்று போனதை நினைந்து ஏங்குகிறான். இப்படி ஒரளவு துன்பத்தை மூன்றளவாக்கித் துயர் அடைகிற இயல்பு மனித சாதிக்கு இருக்கிறது. மரண நினைவு ஆனால் இத்தகைய நிலை மரணத்தைப் பொறுத்த வரை யில் அவனுக்கு இருப்பது இல்லை. மற்ற மற்றத் துன்பங்களை எதிர்பார்த்துத் துயர் உறுவதும், வரும் போதும் வந்த போதும் துயர் உறுவதும் ஆகிய இயல்பு மனிதனுக்கு இருந்தாலும், மரணம் என்னும் பெரிய துன்பத்தைப் பற்றி அவன் அவ்வாறு இருப்பது இல்லை. நமக்கு மரணம் வருமே!’ என்று அவன் நினைக்கிறது இல்லை. கண்ணுக்கு முன்னால் நாள் தோறும் பலர் மரித்துக் கொண்டிருந்தாலும் மரணம் என்பது தனக்கும் உண் டென்பதை அவன் மறந்துவிடுகிறான். அப்படி அவன் மறவாமல் இருப்பானானால் ஆராய முற்படுவான். அப்படிச் செய்யாமல் இருப்பதனால் மரணத்தின் துன்பம் அவனுக்கு உடனுக்குடன் மறந்து போகிறதென்று கொள்ள வேண்டும். கண்ணுக்கு முன்னால் உண்டாகிற துன்பத்தை, அறிவினால் நமக்கு நிச்சயம் உண்டென்று முடிவு கட்டும் துன்பத்தை, மறந்துவிட்டு வேறு விளையாடல் களிலும், செயல்களிலும் மனிதன் ஈடுபடுகிறான். இதுதான் மாயை. பாதுகாப்பு நல்ல வெயில் அடிக்கிறது. புழுக்கமும் சூடும் தாங்கவில்லை. அப்போது வீதியில் ஒருவன் கம்பளி விற்றுக் கொண்டு போகி றான். 'சித்திரை மாதத்தில் கம்பளி எதற்கு? இப்போது விற்றுக் கொண்டு போகிறானே!" என்று யாராவது கேட்கலாம். ஆனால் அவனை அழைத்துக் கம்பளி வாங்குவாரும் இருக்கிறார்கள். சித்திரை மாதத்திற்குக் கம்பளி தேவையில்லை என்பது உண்மை தான். ஆண்டு முழுவதும் சித்திரை மாதமாகவே இருக்குமா? வரப்போகிற மார்கழி மாதத்தில் மிகவும் குளிரும் என்று தெரிந்து 16