பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி போகிற வழியில் எம்பெருமானைச் சந்திப்பது போல மனம் போகிற வழியிலும் அவனைச் சந்திக்க வேண்டும். உலகில் நடமாடுகிறோம். தொழில்படுகிறோம். கோயிலுக்குச் சென்று, இறைவன் தண்டைச் சிற்றடியை வந்தித்து, வாயார வாழ்த்திப் பின்னர் நம் வீட்டுக்கு வருகிறோம். உட்கார்ந்திருக்கும்போது என்ன என்னவோ எண்ணங்கள் உண்டாகின்றன. கண்ணை மூடிக் கொண்டு, "ஐயோ இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் எல்லாம் வருகின்றனவே! மயில் வாகனப் பெருமானே! நீ வந்து இவற்றை எல்லாம் ஒழித்து என் உள்ளத்திலேயே எப்போதும் தங்கிவிடமாட்டாயா?" என்று நம்முடைய முயற்சியினால் அவனை அடைவதற்கு முயன்றால் எம்பெருமான் மயில் வாகனத்தில் நம் உள்ளத்திலேயே வந்து எழுந்தருளுவான். நாம் செல்கிற பாதையிலே, எண்ணும் மனத்திலே நாமும் மயில் வாகனப் பெருமானும் சந்திக்கலாம். கோயிலுக்குப் போய் வழி பட்டு வருவதன் பயன் இதுதான். அப்பெருமான் தன்னுடைய கருணையினால் தன் வீட்டை விட்டு நம்முடைய மனத்திலேயே வந்து நம்மைச் சந்திக்க வரும்போது நாம் சும்மா இருக்கலாமா? அந்த இடத்திலே அவனைச் சந்திக்க முயல வேண்டாமா? 'மயில் வாகனனைச் சந்திக்கவில்லையே! இனிமேல் நானும் முயன்று சந்திக்கிறேன் சுவாமி என்றான் இவன். அநுபவ உதயம் குருநாதரின் அதுக்கிரகத்தினால் மயில் வாகனனைச் சிந்தித் தான். சேவித்தான். வந்தித்தான். வாழ்த்தினான். அப்பெருமான் தன் கருணையினால் இவன் வீட்டு வாசலிலே எழுந்தருளும் போது சந்தித்தான். பிறகு இவன் மனமாகிய வீதியிலே எழுந் தருளும் போதும் சந்தித்தான். . 'இப்படிச் சந்தித்த பின்னே உண்டாவது என்ன? பின்பு தான் அநுபவம் உண்டாகிறது. இதுவரைக்கும் சாதன வகை. தொழிற்சாலையில் பொருள்களைப் பண்ணுகின்ற வகை. பின்பு உபயோகம். மயில் வாகனனைச் சந்திக்க ஆரம்பித்தவுடன்தான் அநுபவ நலன்கள் உண்டாக ஆரம்பிக்கின்றன. நடையிலே வேகம், பேச்சிலே வேகம், மனத்திலே வேகம் - இப்படியாக எப்போதும் சுழன்று கொண்டிருப்பதன் மூலம் 25了