பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 புத்திக்கும், உடம்புக்கும் பலவிதமான துன்பங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த இவனுக்கு ஒரு நல்ல குருநாதர் கிடைத்தவுடன், பலபலவற்றை எண்ணி எண்ணிச் சதா சலித்துக் கொண்டிருந்த சிந்தனையிடையே இறை வனுடைய நினைவு உண்டாயிற்று. எதை எதையோ எண்ணி ஒடிக் கொண்டிருந்த அவன் சிந்தனை இறைவனை நினைந்து கொஞ்சம் கொஞ்சம் நிற்க ஆரம்பித்தது. எங்கெங்கோ ஒடிக் கொண்டே இருந்த இவன் கால்கள் போகிற வழியில் எந்தக் கோயில் தென்பட்டாலும் ஒட்டம் நின்று சேவிக்கச் செய்தன. சேவிக்கும்போது அக்கால்களும் கொஞ்சம் நின்றன; மனமும் நின்றது. அநுபவம் முதிர்ந்து வரவர இவன் கோயிலுக்குள் சென்று இறைவன் சந்நிதானத்தில் நின்று அவனது தண்டைச் சிற்றடியைப் பற்றிக் கொண்டு வாயார வாழ்த்த ஆரம்பித்தான். உடம்பினுடைய ஒட்டம் அங்கே நின்றுபோய்விட்டது; மனத்தின் ஒட்டமும் நின்று போயிற்று. வாழ்த்திக் கொண்டிருந்த வாயினின்றும் சொல் லும் வெளிப்பட மறுத்து நின்றுவிட்டது. மனமும் எம்பெருமானை வாழ்த்தத் தலைப்பட்டது. ஒருமைப்பட்ட அவன் மனைத்தை நாடி மயில்வாகனன் உலா வர ஆரம்பித்தான். இவனும் முந்தி நின்று அவனைச் சந்திக்க ஆரம்பித்தான். இருவருக்கும் மனத் திலே சந்திப்பு ஏற்பட ஆரம்பித்தவுடன் வாயின் மொழிக்கோ, உடம்பின் செயலுக்கோ அங்கே வேலை உண்டா? அநுபவம் ஆரம்பமாகி விட்டது. பொய்யும் மெய்யும் அதற்கப்புறம் ஒன்று போயிற்று; ஒன்று வந்தது. எந்த எந்தத் துன்பங்கள் நம்முடைய பிறவிக்குக் காரணமாக இருந்தனவோ, அவை போகும். ஆண்டவனுடைய அருளைப் பெறுவதற்கு அதுகூலமாக இருப்பவை வந்து ஒட்டிக் கொள்ளும். மனைவி, வீடு, வாசல், செல்வம் எல்லாம் நிலையானவை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் முதலில் கோயிலுக்குப் போவது என்றாலே பிடிக்காது. தினமும் ஒரு சினிமாவுக்காவது போக வேண்டும். அதுதான் மெய், வாழ்க்கையிலே இன்பத்தை அளிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். யார் யாரையோ 258