பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி தனக்கு உறவு என்றும், அவர்கள்தாம் தன்னைத் தாங்குவார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான். இரண்டு வட்டிக்குக் கடன் கொடுக்கிற மார்வாடியைக் கட்டிக் கொண்டு அலை கிறான். இப்படிப் பலவகையிலே பொய்யான வாழ்வையே விரும்பி ஓடியவன் பெரிய பணக்காரனாகிய மயில்வாகனனைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டால் முன்பு பார்த்தவர்களை வெறுத்து ஒட ஆரம்பிக்கிறான். பொய்யை வெறுக்கிறான். தனக்கு மீட்டும் பிறவிக்குக் காரணமான தன்னுடைய பொய்யான செயல்களை வெறுக்கிறான். ஆறு மணி ஆட்டத்துக்கு இரண்டு மணியி லிருந்தே க்யூ வரிசையில் முன்பெல்லாம் நிற்பவன், நண்பர்கள் இப்போது டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு சினிமா வுக்கு வரவேண்டும் என்று தொந்தரவு செய்தாலும் வரமாட்டேன் என்கிறான். 'எனக்குச் சினிமா வேண்டாம்' என்று அதை வெறுக்கிறான். 'அந்தக் கருணை வள்ளலின் கோயில் எங்கே இருக்கிறது? எந்த ஊர்களில் எல்லாம் இருக்கின்றன என்று தேடிக் கொண்டு ஒடுகிறான். தையலார் மையலிலே தாழ்ந்து வீழ்ந்து, அதுவே இன்பம் என எண்ணிப் பஞ்சார் அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப் பட்டுக் கொண்டு இருந்தான் முன்பெல்லாம். இப்பொழுதோ மயில் வாகனனைச் சிந்தித்து, வந்தித்து, வாழ்த்தி, சந்தித்து, அவனுடைய அருளையே வெங்காம சமுத்திரத்தைக் கடக்கும் தெப்பமாகக் கொண்டுவிட்டான். ஊர், பேர், உற்றார், கற்றார் என்று விரும்பி ஓடிக் கொண்டிருந்தவன் ஊர் வேண்டாம். பேர் வேண்டாம், உற்றார் வேண்டாம், கற்றார் வேண்டாம், எல்லாம் எனக்கு இறைவன்தான் என்று ஒடுகிறான். இறைவனது அருளைப் பெற்ற மாணிக்கவாசகர், 'குற்றாலத்தில் நடமிடும் பெருமானே! எனக்கு ஒன்று வேண்டும்; ஒன்று வேண்டாம். நான் வேண்டுவது மெய். நான் வெறுப்பது பொய். தன்னுடைய கன்றை நினைந்து அன்போடு கத்துகின்ற பசுவினுடைய மனம்போல, உன்னுடைய குரைகழற்கே நான் கசிந்து உருகிக் கொண்டிருக்க வேண்டு கிறேன். உற்றார் வேண்டும், ஊர் வேண்டும், பேர் வேண்டும் என்று முன்பு அவற்றை மெய்யென்று நினைந்து வேண்டியிருக் கலாம். இப்போது அவை அத்தனையும் பொய்யென்று தெரி கிறது. ஆகவே, 259