பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டைச் சிற்றடி வதிலிருந்து புந்திக்கும், உடம்புக்கும் வரும் துன்பத்தைப் போக்க இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதை நாம் உணரலாம். புலன்களின் வழியே சென்று பல பல காரியங்களைச் செய்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு முதலில் தெய்வ நினைவு வரவேண்டும். தெய்வ சித்தம் உண்டான பிறகே கோயில்களின் இருப்பிடம் தெரிகிறது. கோயில்களை கண்ட போது, உள்ளே போகாவிட்டாலும் நின்று சேவிக்கும் மனப் பக்குவம் வர வேண்டும். பசிப்பவனுக்குச் சோறு வேண்டும். சோற்றைப் பார்த்தால் போதாது; தொட்டால் போதாது; எடுத்துச் சாப்பிட்ட பின்தான் பசி தீரும். இறைவன் இருக்கின்ற நினைப்புத் தோன்றினால் மட்டும் துன்பம் நீங்காது. மனம் வாக்குக் காயம் ஆகிய மூன்று கரணங்களையும் கொடுத்து வாழச் செய்திருப்பவன் ஆண்டவன். மனத்தினால் சிந்தித்து, உடம்பினால் வந்தித்து, வாயினால் வாழ்த்தி வாழ வேண்டும். இப்படி வாழ்ந்தால் இறைவனும் நம்மைச் சந்திக்க வருவான். நாமும் அவனைச் சந்திப்போம். சந்திப்பின் பயனாக மனோலயம் ஏற்பட, ஞான ஒளி விளங்கும். பொய்யைப் பொய் என்று உணரும் தன்மை வரும்; எவற்றை யெல்லாம் மெய்யென்று நம்பி வாழ்ந்தோமோ அவற்றின் உண்மைத் தன்மை தெரிய, அதனால் அவற்றையே பொய் பொய் என்று நிந்தித்து ஓடும் தன்மை வரும். மெய்யைச் சாதிக்கலாம். இப்பொழுது எடுத்திருக்கும் பிறவியினால் மனத்தில் உண்டா கின்ற துன்பங்கள் போய் விடும்; உடம்பினால் வருகின்ற துன்பங் கள் போய்விடும். மீட்டும் பிறப்பு எடுப்பதற்குக் காரணமான வினைகளே அற்றுப் போய் விடுவதால் பிறப்பில்லா முத்தி இன்பத்தை, துன்பமில்லாத பெருவாழ்வை, அடையலாம். பொய்யை நிந்தித்து, மெய்யைச் சாதிக்கிறவர்களுக்கு உடம்பு இருந்தும் அதனாலே துன்பம் இல்லை; மனம் இருந்தும் அதனாலே துக்கம் இல்லை. நமக்கும் அந்த நிலை வரவேண்டுமானால் முருகனது நினைவு வேண்டும். அவன் சிற்றடியை வந்திக்க வேண்டும்; அவனை வாழ்த்த வேண்டும். அவன் நம்மைத் தேடிவர, நாமும் அவனை நாடிச் சென்று சந்திக்க வேண்டும். இவற்றின் பயனாகப் பொய்யை நிந்தித்து, மெய்யைச் சாதித்து, க.சொ. W-18 263