பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வாதியின் கூட்டத்தைச் சேர்ந்தவரோ? அவர் அரசில்வாதியும் அல்ல; சமரச சமயஞானி என்பதை நாம் முன்பே அறிவோ, பின் ஏன் அப்படிப் பேசுகிறார்? இதைப் பற்றி முன்பே ப, முறை சொல்லியிருக்கிறேன். அருணகிரியார் கருணை தம்மை மிகவும் இழிந்த நிலையில் இருப்பதாக அவர் பாடுகிற பாட்டுக்கள் எல்லாம் மிகவும் இழிந்த நிலையில் உழன்று கொண்டிருக்கும் நம்மை நினைந்தே பாடியவை. நாம் அழவேண்டியதை நமக்காக அவர் அழுகிறார்; பார்வை மானைக் காட்டாவிட்டால் பிற மான்களைப் பிடிக்க முடியுமா? அவர் அப்படி நம்மைப் போல அழாவிட்டால் அவரிடம் நாம் நெருங்கு வோமோ? அவர் தாம் மிகவும் இழிந்த நிலையில் இருப்பவரைப் போலச் சொல்கின்ற பாடல்கள் நம்மிடம் அவருக்கு உள்ள கருணையைக் காட்டும். அவர் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்லும் பாடல்கள் அவரைப் போலவே நாமும் முயன்றால் அத் தகைய இன்பத்தைப் பெறலாம் என்னும் நம்பிக்கையை ஊட்டும். துக்கம் இல்லாதவனும் துக்கப்படுபவனோடு சேர்ந்து அழுதால் துக்கப்படுபவனுடைய துக்கம் சமனமாகும் என்பர். இறந்த வீட்டில் எத்தனை வெளியார்கள் வந்து வீட்டுக்காரர் களோடு அழுகிறார்கள் துன்பத்தில் உழன்று அழுது கொண்டிருக் கிறவர்கள் நாம். நம்முடைய துன்பத்தைக் குறைக்க அருணகிரி நாத சுவாமிகள் நம்மோடு சேர்ந்து கொண்டு அழுகிறார். நம்மைப் போலவே வெறும் அழுகையோடு அவர் நின்று விட்டால் அதனால் நமக்கு பயன் இல்லை. துன்பத்தை நீக்கிக் கொள்ள நமக்கு வழியும் வேண்டும்; இன்பத்தைத் துய்க்கலாம். என்று நம்பிக்கை வளர வழி வேண்டும். ஆகவே இடை யிடையே தம் அநுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். - 'நமக்காக அவர் அழவேண்டாமே. அவருடைய அநுபவத்தை மாத்திரம் கச்சிதமாக ஒரு பத்துப் பாடல்களில் சொல்லிவிட்டுப் போகக் கூடாதா?’ என்று கேட்கிற பேர்வழிகளும் இருப்பார்கள் பச்சிலைக்கு விலை இல்லை; மதிப்பு இல்லை தான். பெரிய மாலை கட்டவேண்டுமென்றால் பூக்களை மட்டும் கொண்டு 268