பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் உபதேசம் பெற்றவர்களாகையால், பிறருக்கு உபதேசம் செய்கிற பெருமை உடைய குருக்களாக இலங்கினார்கள். அந்த அவதார புருஷர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர் அருணகிரிநாதப் பெருமான். அவருக்கு, நம்மைப் போல வாய் வயிற்றோடு பிறந்து வந்த மனிதர் யாரும் குருவாக வரவில்லை. ஆண்டவனே அவருக்கு உபதேசம் பண்ணினான். அவனே குருநாதனாக எழுந்தருளி அவருக்கு ஜபமாலை தந்து உபதேசித்தான். இதற்குச் சாட்சி மூன்றாவது பேர்வழி யாரும் வேண்டாம். அவரே சாட்சி; நேர்முகமான சாட்சி. அவருடைய வாக்கே பிரமாணம். "செபமாலை தந்தசற் குருநாதா திருவாவினன்குடிப் பெருமாளே” என்று திருப்புகழில் சொல்கிறார். பழனியில் இருக்கிற எம் பெருமானிடத்தில் ஈடுபட்டுத் தோத்திரம் செய்கிறார். 'நீ உப தேசம் செய்தாயே! ஜபமாலை தந்து, குருநாதனாக வந்தாயே!” என்று இறைவனைப் பார்த்துச் சொல்கிறார். 'முகம் ஆறுடைய தேசிகனே; சண்முகநாதனே! ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்தது ஓர் ஆனந்தத் தேனை, அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய எனக்கு உபதேசம் செய்தாயே" என்று மிகப் பெருமிதத் தோடு கந்தர் அலங்காரத்திலும் பேசியதைப் பார்த்தோம். முருகன் குருநாதனாக எழுந்தருளிச் செய்த உபதேசங்கள், வழங்கிய இன்பம் ஆகியவை, நம்மிடையே வாழ்ந்த அருணகிரி நாதரின் வாக்கில் சந்தப்பாட்டுக்களாக, கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களாக, கலிவிருத்தங்களாக வெள்ளம் வெள்ளமாகப் பொங்கி வந்திருக்கின்றன. அப்படி அவர் தாம் பெற்ற உயர்ந்த ஞானத்தை, இன்பத்தை, நமக்கு எடுத்துச் சொல்லும் பாடல் களில் ஒன்றே இப்பொழுது நாம் பார்க்கப் போகிற பாட்டு. வியப்பு வரையற்று அவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற புரையற்ற வேலவன் போதித்தவா! 271.