பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலவன் போதித்த ஞானம் எண்ணம் ஓடினால் அதை நிறுத்திக் கொள்ள முதலில் பழக வேண்டும். அப்புறம் படிப்படியாக எந்த இடத்தில் இருக்கி றோமோ அந்த இடத்துச் சிந்தனையும் அற்று விடும்; உரையும் 'எனக்கு வேலவனே குருநாதனாக இருந்து நல்லுபதேசம் செய்தான். பஞ்சபூதம் அற்றன; உரை அற்றது. அதற்கு அடுத்தாற்போல உணர்வும் அற்றது” என்கிறார் அருணகிரியார். 'உணர்வு அற்று.” 'வாக்கு மெளனம் வந்தது. மனோ மெளனம் வந்தது. உடம்பு மரத்துப் போய்விட்டது. நாம் கொஞ்ச நேரம் சம்மணம் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் கால் திமிர்த்துக் கொள்கிறது. நம் கால் நமக்குச் சொந்தம் இல்லை போலத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட நிலை அல்ல இது; இது சரீர வாசனை அற்றுப் போதல். அதற்கு ஏற்படுகிற இன்ப துன்பங்களை மனம் உணர் வது இல்லை. மனம் இன்ப துன்பங்களைச் சாட்சியாக இருந்து அநுபவிக்கும். 'செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தோடா நிலை" என்று பழைய காலத்து நூலில் வருகிறது; எது நடந்தாலும் மனத்திலே சகஜமான நிலை இருக்கும். வானமே இடிந்து விழுந்தாலும் அவர்களுடைய மனத்திலே எவ்விதமான அதிர்ச்சி யும் இராது. பாம்பு இல்லாவிட்டாலும் பாம்பு என்றால் நம் நெஞ்சம் பகீர் என்கிறது. இந்த நிலை அவர்களுக்கு இராது. முதலில் வாங்மெளனம் வந்தது; அடுத்து மனோ மெளனம் வந்தது. உணர்வு அற்று. உடலும் உயிரும் அறுதல் பின்பு காஷ்ட மெளனம் ஏற்பட்டது; உடலாலே செயல் ஒன்றும் செய்யாது இருக்கிற நிலை வந்தது. உடலினால் உண்டாகிற இன்ப துன்பங்களைச் சாட்சியாகப் பார்க்கிற நிலை வந்தது. உடல் அற்றது; அப்புறம் உயிர் அற்றது. 281