பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 உடல் அற்று உயிர் அற்று. உடல் போய்விட்டது, உயிர் போய்விட்டது என்றால் பிராணன் போய்விட்டது என்று பொருள் அன்று. மூன்று வி, மெளனமும் வந்த பிறகு மற்றொன்று வர வேண்டும்; ஜீவ போதம் கழியவேண்டும். "இந்த உலகத்தில் நான் வாழ்கிறேன். இவை எல்லாம் எனக்கு உரிய பொருள்கள். நான் நினைத்தால் எந்த இன்பத்தையும் அநுபவிக்கலாம்' என்று வரும் நான் நான் என்ற நினைப்பே ஜீவபோதம். வாக்குப் போய், மனம் போன பிறகு, சரீரவாசனை கழன்றது. அப்பால், நான் நான் என்கிற அகங்கார உணர்ச்சி, ஜீவபோதமாகிய உயிர் போய்விட்டது. உபாயம் அறுதல் இதுவரையிலும் "நான் நான்' என்கிற அகங்காரம் போகா மையினால் தனக்கு என்ன என்ன வகையில் கருவிகரணங்களால் இன்பங்களை உண்டாக்கலாம் என்று பலவித உபாயங்களை மேற்கொண்டு வந்தான். ஜீவபோதம் போகாத வரையில் மற்ற வர்கள் தேடுகிற மாதிரி உலகில் பலவித முயற்சிகளைச் செய் தான். ஜீவபோதம் கழன்ற பிறகு - உபாயம் அற்று அதற்கப்பால் தன் முயற்சி என்று என்ன இருக்கிறது? ஆணி அடிக்கச் சுத்தியின் உதவியைத் தேடுகிறான். ஆணி அடித்த பிறகு சுத்தியலைத் தூக்கி எறியத்தானே வேண்டும்? ஒருவன் கருவி யினால் பெறும் பயனை அடைந்த பிறகு அக்கருவியை எறிந்து விடாமல் என்ன செய்வான்? சாதனங்களால் சாத்தியத்தை அடைந்துவிட்ட பிறகு உபாயத்திற்கு, சாதனத்துக்கு வேலை என்ன? ஒன்றும் இல்லை. உபாயம் அற்று. உபாயம் - சாதனவகை, சாதனவகை அற்றுவிட்டது. சமையல் ஆகிற வரைக்கும் அஞ்சறைப்பெட்டிக்கு வேலை உண்டு; அடுப்புக்கு வேலை உண்டு; அரிவாள் மனைக்கு வேலை உண்டு. சமையல் ஆனபிறகு அவற்றை எல்லாம் எடுத்து அப்பால் வைத்துவிட்டுச் சாப்பிட வேண்டுமே தவிர அவற்றை வைத்துக் கொண்டே உட்கார்ந்திருப்பார்களா? 282